PBKS vs RCB Result: நாக்அவுட்டான பஞ்சாப்! பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய ஆர்சிபிக்கு நான்காவது தொடர் வெற்றி
ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும் விதமாக அமைந்த இந்த போட்டியில் பஞ்சாப் தோல்வியை தழுவியதுடன் வெளியேறியுள்ளது. முதலில் பேட்டிங் பின்னர் பவுலிங்கில் கலக்கியதுடன் நான்காவது தொடர் வெற்றியை பெற்றுள்ளது ஆர்சிபி அணி. பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய ஆர்சிபிக்கு இது நான்காவது தொடர் வெற்றியாக அமைந்தது.

ஐபிஎல் 2024 தொடரின் 58வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே தரம்சாலாவில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் 11 போட்டிகளில் 4 வெற்றியுடன் 8வது இடத்திலும், ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 4 வெற்றியுடன் 7வது இடத்திலும் இருந்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா ஆகியோருக்கு பதிலாக வித்வீத் கவீரப்பா, லயாம் லிவிங்ஸ்ட்ன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆர்சிபி அணியில் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக லாக்கி பெர்குசன் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த இரு அணிகளுக்கு இடையே பெங்களுருவில் நடைபெற்ற முதல் மோதலில் ஆர்சிபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி பஞ்சாப், ஆர்சிபி ஆகிய இரு அணிகளுக்கும் ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும் போட்டியாக இருந்தது.
