தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  நயகரா நீர்வீழ்ச்சி போல் இருந்த பந்தின் ஈரப்பதம்! லக்னோ போட்டி குறித்து பிளெமிங்

நயகரா நீர்வீழ்ச்சி போல் இருந்த பந்தின் ஈரப்பதம்! லக்னோ போட்டி குறித்து பிளெமிங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 01, 2022 11:00 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷிவம் துபேவை 19வது வீசுவதற்கு அழைத்தது ஏன் என்பதற்கான காரணத்தை சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம் அளித்துள்ளார்.

19வது ஓவரை வீசுவதற்கு ஏன் ஷிவம் துபே அழைக்கப்பட்டார் என்பது பற்றி சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம் அளித்துள்ளார்
19வது ஓவரை வீசுவதற்கு ஏன் ஷிவம் துபே அழைக்கப்பட்டார் என்பது பற்றி சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம் அளித்துள்ளார்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து தொடர்ந்து இரண்டு போட்டிகளில் நடப்பு சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்துள்ளளது. இதையடுத்து இந்த சீசனில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தில் பனிப்பொலிவானது பெரும் பங்கு வகிக்கிறது. பவுலர்களுக்கு தலைவலியாக இருக்கும் இந்த பனிப்பொலிவு காரணமாக இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி எளிதாக சேஸ் செய்யும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

குறிப்பாக டாஸ் வெல்லும் அணி சேஸிங் செய்யவே செய்கின்றன. இதனால் டாஸ் வெல்லும் அணிதான் ஆட்டத்தை வெல்லும் எனவும் கணிக்கப்படுகிறது.

லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் எடுக்க வேண்டி இருந்த நிலையில், 19வது ஓவரை வீசுவதற்கு ஷிவம் துபே அழைக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த ஓவரில் 25 ரன்களை வாரி வழங்கினார். இதனால் கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், லக்னோ பேட்ஸ்மேன்கள் எளிதாக அடித்து வெற்றி பெற்றனர்.

ஷிவம் துபேவை நெருக்கடியான அந்த நேரத்தில் பந்து வீச அழைத்தது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, "ஆட்டம் தொடங்கிய முதலே எங்களுக்கான ஸ்பின் பவுலிங் வாய்ப்பு எடுக்கப்பட்டது என்றே கூறலாம். ஏனென்றால் நயகரா அருவி போல் பந்து இருந்தது. அதிலிருந்து ஈரப்பத்ததை இப்படி சொல்கிறேன். இதனால் லக்னோ சிறப்பாக பேட்ஸ்மேன்கள் எளிதாக விளையாடினர்.

இப்படி ஒரு சூழ்நிலையில் பந்தை கிரிப் செய்வதில் ஸ்பின்னர்கள் சிரமம் அடைந்தனர். அவர்கள் இரண்டு ஓவர்கள் வீசியிருந்தால் வேறு மாதிரியான ஆட்டம் மாறியிருக்கும்.

ஒரு ஓவர் வேறொரு பவுலருக்கு கொடுக்க வேண்டும் என முன்னரே தீர்மானித்திருந்தோம். எனவே ஒரு ஓவரை வீச யாருக்காவது அழுத்தம் தந்து ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்மூலம் தேவைப்படும் ரன்-ரேட்டை எதிரணிக்கு கொடுக்கலாம்.

எனவே அந்த ஓவர் ஸ்பின்னருக்கு பதிலாக துபேவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு நல்ல விலையும் கொடுத்துள்ளோம். அந்த வகையில் ஒரு ஓவர்தான் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என முன்கூட்டியே நினைத்திருந்தாலும், அந்த ஓவரில் அவர்கள் சிறப்பாக ஆடினார்கள்.

டி20 போட்டியை பொறுத்தவரை 210 ரன்கள் என்பது அதிகமானதுதான். ஆனால் அங்கு நிலவிய சூழ்நிலை, இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிகளுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. கடினமாக இரவாக அமைந்த அந்த நாளில், ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் வைக்கு கடினமாகவே முயற்சித்தோம்" என்றார்.

ஐபிஎல் தொடர்களில் முதல் முறையாக தொடக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்க் அடுத்த ஆட்டத்தில் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.

WhatsApp channel

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்