தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vikravandi By-election : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தற்போதைய நிலவரப்படி யார் முன்னிலை.. இதோ விவரம்!

Vikravandi By-Election : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தற்போதைய நிலவரப்படி யார் முன்னிலை.. இதோ விவரம்!

Divya Sekar HT Tamil

Jul 13, 2024, 09:57 AM IST

google News
Vikravandi by-election : தற்போதைய நிலவரப்படி 11,928 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 5,404 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 605 வாக்குகள் பெற்றுள்ளார்.
Vikravandi by-election : தற்போதைய நிலவரப்படி 11,928 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 5,404 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 605 வாக்குகள் பெற்றுள்ளார்.

Vikravandi by-election : தற்போதைய நிலவரப்படி 11,928 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 5,404 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 605 வாக்குகள் பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 11,928 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

கடந்த 2021-ல் நடந்த சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற நா.புகழேந்தி மரணமடைந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14 ஆம் தேதி துவங்கியது.

கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது

24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 64 மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது.

276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 42 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக 6 மணியளவில் நிறைவடைந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 031 வாக்காளர்களில், 99 ஆயிரத்து 944 பெண் வாக்காளர்கள் உட்பட 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அமைதியாக முடிந்த இந்தத் தேர்தலில், ஆண்கள் - 95,536, பெண்கள் - 99,994, பிறர் - 15 பேர் வாக்களித்துள்ளனர். மாலை 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகித்து வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆளும் கட்சியான திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அதிமுக போட்டியில் இருந்து விலகி கொண்டதால், திமுகவுக்கு போட்டியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அறிவித்தபடி, இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு மேசைகளில் ஒரே சுற்றாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மொத்தம் பதிவான 789 தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார்.முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், 1,356 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 578 வாக்குகளை பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் அபிநயா 78 வாக்குகளை பெற்றுள்ளார்.

11,928 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் முன்னிலை

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது. 14 மேஜைகளில் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி 11,928 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 5,404 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 605 வாக்குகள் பெற்றுள்ளார்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை