Tamil Top 10 News: விசிக மது ஒழிப்பு மாநாடு முதல் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் வரை - டாப் 10 நியூஸ்
Oct 02, 2024, 08:49 AM IST
Morning Tamil Top 10 News: விசிக மது ஒழிப்பு மாநாடு, இ-பாஸ் பெறும் நடைமுறை நீட்டிப்பு, பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் உள்பட இன்றைய காலை நேரத்திற்கான டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
Morning Tamil Top 10 News: தமிழகம் முழுவதும் நிகழ்ந்த அரசியல் முக்கிய நிகழ்வுகள் உள்பட அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
விசிக மது ஒழிப்பு மாநாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மாநாடு இன்று நடைபெறுகிறது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்கின்றனர்.
போதை மாத்திரைகள் விற்பனை
சென்னை கோயம்பேட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கஞ்சாவும் விற்பது போலீசார் விசாரணையின்போது தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து 49 போதை மாத்திரைகள், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் பட்டாக்கத்தி, ஒரு பட்டன் கத்தி ஐந்து செல்போன்கள், எடை மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
5 பேருக்கு விருது
மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் துறையினருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம்
தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. தூய்மையான குடிநீர் விநியோகம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ஏப்.1 முதல் செப்.30 வரை கிராம ஊராட்சியின் பொது நிதியில் மேற்கொண்ட செலவின அறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டும். 2023-24 ஆண்டுக்கான அறிக்கையை மக்கள் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெற வேண்டும்
இ-பாஸ் பெறும் நடைமுறை நீட்டிப்பு
நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் பெறும் நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
டிராக்டர் கவிழ்ந்து விபத்து
சென்னை அசோக் பில்லர் நோக்கி தண்ணீர் லோடுடன் வந்த டிராக்டர், உதயம் தியேட்டர் 100 அடி சாலை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் சந்தோஷ் என்பவருக்கு கை எலும்பு முறிந்தது. கே.கே.நகர் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 சிறுமிகள் மீட்பு
பெற்றோரிடம் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போன கேரளாவைச் சேர்ந்த இரண்டு 16 வயது சிறுமிகளை சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட 2 சிறுமிகளையும் சேலம் குழந்தைகள் நல உதவி அலுவலக அதிகாரிகள் உதவியுடன் அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைத்த ரயில்வே போலீஸ்.
குலசை தசரா நாளை தொடக்கம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நாளை தொடங்குகிறது. அக்டோபர் 12-ம் தேதி நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும்.
குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டை மேம்படுத்தவும் கடந்த 5 ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த அபராத தொகை தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது மற்றும் தனியார் இடங்களில் தூக்கி எறியப்படும் குப்பை, வாகனங்களில் இருந்துகுப்பை கொட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு அபராதம் ரூ.500-ல் இருந்துரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டாபிக்ஸ்