தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Trending News For Tamil Nadu On August 18, 2022

வன்னியர் சங்க பிரமுகர் படுகொலை, வங்கி கொள்ளை - முக்கிய செய்திகள் (ஆக.18)

Karthikeyan S HT Tamil

Aug 18, 2022, 05:49 PM IST

வன்னியர் சங்க பிரமுகர் படுகொலை, சென்னை வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
வன்னியர் சங்க பிரமுகர் படுகொலை, சென்னை வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

வன்னியர் சங்க பிரமுகர் படுகொலை, சென்னை வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

  • பேருந்துகளில் பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் போலீஸில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க வகை செய்யும் விதத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இது உடனடியாக அமல்செய்யப்பட்டுள்ளது.
  • கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
  • தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 37 ஆர்சி புத்தகங்கள் மாயமானது தொடர்பாக 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கியெறிந்து விட்டு அதிமுகவின் ஒற்றுமையே பிரதானம் என செயல்படலாம் வாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
  • அதிமுகவில் மீண்டும் தன்னோடு இணைந்து செயல்பட வருமாறு பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை நிராகரித்த பழனிச்சாமி, ஓபிஎஸ் பதவியைத் தேடி ஓடுபவர் என விமரித்துள்ளார்.
  • நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று கீதையில் கண்ணனின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கும் உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  • சென்னை வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • உழவர்களின் நலனைக் காக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
  • தமிழறிஞர் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
  • மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் முறைகேடாக கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் சிக்கியது.
  • தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
  • போஸ் கொடுத்தால் போதுமா; கடன் கொடுக்க மாட்டீர்களா? கதறும் நரிக்குறவர்களின் கண்ணீரைத் துடைக்குமா அரசு? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
  • ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில், தமிழ்நாடு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
  • அதிமுகவில் இணைய வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் அழைப்புக்கு டி.டி.வி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
  • மொரப்பூர் ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து இறங்கிய காவலர் நிலைதடுமாறி விழுந்ததில் உடல் சிதறி பலியானார்.
  • குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளதன் மூலம் பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
  • நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசியது தொடர்பான விவகாரத்தில், முன்ஜாமீன் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.
  • மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கைதி, சிகிச்சைக்காக சென்ற இடத்தில் போலீஸாரை ஏமாற்றி தப்பி ஓடிவிட்டார்.
  • ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • மயிலாடுதுறையில் நேற்று நள்ளிரவு வன்னியர் சங்கப் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பா.ம.க, வன்னியர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
  • தமிழகத்தில் புதிதாக 649 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விவசாயிடம் 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.
  • ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு இன்றுடன் முடிவுரை எழுதப்படட்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
  • கல்வித் தொலைக்காட்சி சிஇஓவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
  • தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப, சட்டக்கல்வி இயக்குநருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரை செய்துள்ளது.
  • 65 ஆவது காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க உள்ள சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.சீர்காழியில் அருகே திருட்டுபோன இரு சக்கரவாகனத்தை சிசிடிவி காட்சி மூலம் தேடி இளைஞர்கள் சிலர் மீட்டுள்ளனர்.
  • அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
  • ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசு மற்றும் டி.ஜி.பி எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
  • தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம், தமிழ் வழியில் படித்தமைக்கான பிஎஸ் டிஎம் சான்றிதழ்கள் வழங்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

'அஜித்துக்கும் எனக்கும் ஒரே Wavelength'..கலைஞர் இருக்கும் போதே தைரியம்..பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்த ஜெயக்குமார்!

Weather Update: மக்களே உஷார்.. இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்…வானிலை மையம் எச்சரிக்கை!

Today Gold Rate : மாதத்தின் முதல் நாளே குட் நியூஸ்.. தங்கம் சவரனுக்கு 920 குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

LPG Price : குட் நியூஸ் மக்களே.. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு.. வெளியான புதிய விலைப்பட்டியல்!

டாபிக்ஸ்