TOP 10 NEWS: மிலாடி நபி விடுமுறை மாற்றம் முதல் விஜய் நடத்தும் ஆலோசனை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
Sep 09, 2024, 07:10 PM IST
TOP 10 NEWS: தேசியக் கல்விக் கொள்கையை அமல் செய்ய சொல்லும் மத்திய அரசு, மகளிர் உரிமை தொகையை பாராட்டும் உதயநிதி, தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம், மிலாடி நபி விடுமுறை மாற்றம், மாநாடு தொடர்பாக விஜய் ஆலோசனை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
1.தேசியக் கல்விக் கொள்கையை அமல் செய்க!
அரசியல் ஆதாயங்களை விட மாணவர்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி உள்ளார்.
2.நிபுணர் குழுவுக்கு பரிந்துரை
2000 ரூபாய்க்கு கீழான யுபிஐ பரிவர்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கும் பரிந்துரையை நிபுணர் குழு ஆய்வுக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளதாக தகவல்.
3.மிலாடி நபி விடுமுறை மாற்றம்
தமிழ்நாட்டில் மிலாடி நபி விடுமுறை ஆனது வரும் 16ஆம் தேதிக்கு பதில் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக அரசு அறிவிப்பு.
4.மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்
மாவட்டம் தோறும் குறைந்தபட்சம் ஒரு அரசு முதியோர் இல்லத்தை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
5.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களால் தமிழக பெண்கள் தலைநிமிர்ந்து நிர்ப்பதாக மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.
6.தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. சட்டம் ஒழுங்கு முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
7.அதிமுக எப்போது ஒன்றிணையும்?
அடுத்த ஆண்டு இறுதியில் அதிமுக ஒன்றிணையும் என்றும், எடப்பாடி பழனிசாமி உட்பட யாரையும் இழக்க விரும்பவில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி.
8.மாநாடு குறித்து விஜய் ஆலோசனை
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகள் உடன் நடிகர் விஜய் ஆலோசனை.
9.கொலைகள் குறித்து முதல்வருக்கு தெரியுமா?
சென்னையில் தொடங்கி தென்காசி வரை படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய கொடூர படுகொலைகள் குறித்தெல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? என்றே தெரியவில்லை. தமிழ்நாட்டில் நடப்பதை தெரிந்து கொள்ளாமல் தம்மைச் சுற்றி மாய வளையத்தை அமைத்துக் கொண்டு தமிழகம் சொர்க்கபுரியாக திகழ்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மக்கள் படும் பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். அவர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்.
10.போதை பொருள் அதிகரிப்புக்கு திமுகவே பொறுப்பு
சென்னையிலிருந்து தான் இலங்கை, தாய்லாந்து, மலேஷியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு மெத்தபெட்டமைன் கடத்தப்படுகிறது. தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு சிறப்பாக செயல்பட்டால் இந்த வகைப் போதைப்பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தடுக்க முடியும். ஆனால், தமிழக அரசு போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, போதைப்பொருள்கள் கடத்தலில் தொடர்புடையவர்களுக்கு பதவி கொடுத்து தமிழக ஆளுங்கட்சி அழகு பார்க்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக, குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் போதைப்பொருள் கடத்தல் 7 மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதால் அதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.
டாபிக்ஸ்