தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ‘திமுகவை விளாசும் திருமா! மகாவிஷ்ணு வழக்கில் போலீஸ் வாதம்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ‘திமுகவை விளாசும் திருமா! மகாவிஷ்ணு வழக்கில் போலீஸ் வாதம்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Sep 11, 2024, 02:07 PM IST

google News
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுதினம், திமுக அரசு மீது திருமா விமர்சனம், பத்திரப்பதிவு துறை நடவடிக்கைக்கு ராமதாஸ் எதிர்ப்பு, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுதினம், திமுக அரசு மீது திருமா விமர்சனம், பத்திரப்பதிவு துறை நடவடிக்கைக்கு ராமதாஸ் எதிர்ப்பு, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுதினம், திமுக அரசு மீது திருமா விமர்சனம், பத்திரப்பதிவு துறை நடவடிக்கைக்கு ராமதாஸ் எதிர்ப்பு, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

1.பள்ளிக்கூடத்திற்கு அரிவாளுடன் வந்த மாணவர்கள்

நெல்லையில் பள்ளிக்கூட புத்தக பையில் அரிவாள் கொண்டு வந்த மாணவரால் ஆசிரியர்கள் அதிர்ச்சி. 2 மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைப்பு. 

2.மகாவிஷ்ணுவை காவலில் எடுக்க கோரிக்கை 

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு ஆஜர், 7 நாள் காவலில் எடுக்க அனுமதி கேட்டு காவல்துறை வாதம்.

3.திமுகவை கண்டித்து கே.பி.முனுசாமி மறியல் 

கிருஷ்ணகிரியில் சாலை அமைக்கும் பணிகளை அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவினர் சாலை மறியல்.

4.திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம் 

அதிகார மமதையில் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமியை திமுகவினர் அவமதித்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அரசின் திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்துகொள்வது மரபு. ஆனால், அரசியல் நாகரிகம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல், அதிகார மமதையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையில் அராஜகப் போக்குடன் செயல்படும் விடியா திமுகவின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என கருத்து. 

5.இமானுவேல் சேகரனுக்கு மரியாதை 

சுதந்திர போரட்ட தியாகி இமானுவேல் சேகரனின் 67ஆவது நினைவுநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை. 

6.ராமநாதபுரம் போலீஸ் மீது குற்றச்சாட்டு 

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு. 

7.திமுக அரசு மீது திருமாவளவன் விமர்சனம் 

டாஸ்மாக் மதுக்கடைகளில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு ஆட்சி நடத்துவது ஏற்புடையது அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம். 

8.சிறைத்துறை டிஐஜியிடம் விசாரணை 

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி தாக்குதல் நடத்திய வழக்கில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை. 

9.மழை எச்சரிக்கை 

கோவை, தென்காசி, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

10.பத்திரப்பதிவு துறைக்கு ராமதாஸ் கண்டனம் 

சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது.பத்திரப்பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது. வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையும் பத்திரப்பதிவு செய்யலாம் என்பதற்காக பத்திரப்பதிவுத் துறை கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை. சர்ச்சைக்குரிய சொத்துகள் மீது நீதிமன்றங்கள் எந்த ஆணையையும் பிறப்பிக்காத நிலையில், அதன் விற்பனையை தடுக்கக் கூடாது என்று சில வழக்குகளில் நீதிமன்றங்கள் வழிகாட்டியிருப்பதாகவும், வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளை பத்திரப்பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புவதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அதைத் தவிர்ப்பதற்காகவே இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் பத்திரப்பதிவுத்துறை கூறியுள்ளது. இது அபத்தமானதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து. 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி