TOP 10 NEWS: ’அதிமுகவுக்கு சிக்னல் தந்த விசிக! மகாவிஷ்ணுவுக்கு எதிராக போராட்டம்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு, மகாவிஷ்ணுவுக்கு எதிராக போராட்டம், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’அதிமுகவுக்கு சிக்னல் தந்த விசிக! மகாவிஷ்ணுவுக்கு எதிராக போராட்டம்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.விசிக மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து உள்ளார்.
2.விசிகவின் அழைப்புக்கு ஜெயக்குமார் பதில்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு செல்வது குறித்து அதிமுக கட்சித் தலைமை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து.