தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ராமர் பெயர் நீக்கம்! ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்! இன்றைய டாப் 10 செய்திகள்!

TOP 10 NEWS: ராமர் பெயர் நீக்கம்! ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்! இன்றைய டாப் 10 செய்திகள்!

Kathiravan V HT Tamil

Sep 09, 2024, 01:53 PM IST

google News
TOP 10 NEWS: ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல், மதுரை புத்தகத் திருவிழா பேச்சாளர் பட்டியலில் இருந்து ராமர் பெயர் நீக்கம், திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
TOP 10 NEWS: ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல், மதுரை புத்தகத் திருவிழா பேச்சாளர் பட்டியலில் இருந்து ராமர் பெயர் நீக்கம், திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!

TOP 10 NEWS: ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல், மதுரை புத்தகத் திருவிழா பேச்சாளர் பட்டியலில் இருந்து ராமர் பெயர் நீக்கம், திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!

1.சாம்சாங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு கோரி சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்.

2.ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் 

730 கோடி ரூபாய் குத்தகை நிலுவை காரணமாக சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைப்பு. அரசின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. 

3.மீனவர்கள் உண்ணாவிரதம் 

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், படகு மற்றும் உபகரணங்களை விடுவிக்க கோரியும் தூத்துக்குடியில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம். 

4.வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 

5.இயக்குநர் அமீர் கடிதம்

தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் சமூக ஊடக பிரபலங்களை உரையாட வைப்பது அதிர்ச்சி அளிப்பதாக இயக்குநர் அமீர் கருத்து. கல்வி நிறுவன வளாகங்களில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவை நடத்த அனுமதிக்க கூடாது என முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். 

6.ராமர் பெயர் நீக்கம்

மதுரை புத்தகத் திருவிழாவில் காமெடி பேச்சாளர் பட்டியலில் இருந்து நடிகர் ராமர் பெயர் நீக்கம் என தகவல் வெளியாகி உள்ளது. 

7.கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் 

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் 1.5 டன் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல். 

8.புதிய மின்சார ரயில்கள் இயக்கம் 

சென்னையில் இருந்து ஆவடி மற்றும் திருவள்ளூருக்கு  புதிதாக மூன்று மின்சார ரயில்கள் இயக்கம். 

9.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் 

மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களால் தமிழக பெண்கள் தலைநிமிர்ந்து நிர்ப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.  

10.கொலைகள் குறித்து முதல்வருக்கு தெரியுமா?

சென்னையில் தொடங்கி தென்காசி வரை படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய கொடூர படுகொலைகள் குறித்தெல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? என்றே தெரியவில்லை. தமிழ்நாட்டில் நடப்பதை தெரிந்து கொள்ளாமல் தம்மைச் சுற்றி மாய வளையத்தை அமைத்துக் கொண்டு தமிழகம் சொர்க்கபுரியாக திகழ்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மக்கள் படும் பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். அவர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்.

போதை பொருள் அதிகரிப்புக்கு திமுகவே பொறுப்பு

சென்னையிலிருந்து தான் இலங்கை, தாய்லாந்து, மலேஷியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு மெத்தபெட்டமைன் கடத்தப்படுகிறது. தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு சிறப்பாக செயல்பட்டால் இந்த வகைப் போதைப்பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தடுக்க முடியும். ஆனால், தமிழக அரசு போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, போதைப்பொருள்கள் கடத்தலில் தொடர்புடையவர்களுக்கு பதவி கொடுத்து தமிழக ஆளுங்கட்சி அழகு பார்க்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக, குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் போதைப்பொருள் கடத்தல் 7 மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதால் அதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி