TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி எட்டு
Mar 27, 2024, 09:27 AM IST
TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகளை தொடராக வெளியிடுகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.. எனவே, தொடர்ந்து படியுங்கள்.. தேர்வில் வெல்லுங்கள்!
இந்நிலையில் அரசியலமைப்புப் பகுதியில் சராசரியாக 11 மதிப்பெண்கள் வரை கேட்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, அரசியலமைப்புப் பகுதி என்பது மிகவும் எளிமையான பகுதி என்பதால் இன்றும் அதில் இருந்து இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4க்காக தெரிந்துகொள்ளவேண்டிய பகுதிகளை சிறு சிறு குறிப்புகளாகப் பார்ப்போம்.
- சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்ற பேரவை ஆகிய ஈரவைகளையும் கொண்ட மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, பீஹார், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகியவையாகும்.
- தமிழ்நாட்டில் எத்தனை அமைச்சர்கள் இருக்கலாம்?: தமிழ்நாட்டில் உள்ள மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில், 15 விழுக்காடு பேர் அமைச்சராக இருக்கலாம். அதன்படி, 234 சட்டப்பேரவை உறுப்பினர்களில், 36 பேர் வரை அமைச்சராக இருக்கலாம்.
- தமிழ்நாட்டில் சட்டமேலவை நீக்க நடவடிக்கை எப்படி நடந்தது?
1986ல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்டமேலவை நீக்க மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்டமேலவை நீக்கப்பட்டது. இந்தச் சட்டம், 1986ஆம் ஆண்டு முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.
- ’லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றமானது, சமரசப் பேச்சுவார்த்தைகள்மூலம், மக்களின் பிரச்னைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இது 1987ல் Legal Services Authorities Act மூலம் அமைக்கப்பட்டது.
- மக்களாட்சியின் கோட்பாடு:
மக்களாட்சி என்றால் மக்களால் ஆட்சி செய்யப்படுதல் என்பதாகும். இது இரண்டு கிரேக்கச் சொற்களால் ஆனது. டெமோஸ்(Demos) என்பது மக்களைக் குறிக்கிறது. க்ராடோஸ்(Kratos) என்பது ஆட்சியைக் குறிக்கிறது.
- அச்சு இயந்திரம் ஜோஹன்னல் குட்டன்பெர்க் என்பவரால் 1453ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
- 1956ஆம் ஆண்டு முதல் ஆகாசவானி(வானில் இருந்து வரும் ஒலி) என்ற பெயரில், அகில இந்திய வானொலி செயல்பட்டு வருகிறது. ஆனால்,அதற்கு முன்பே, 1936ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது.
- இந்தியாவில் பெண் கல்வியை நடைமுறை வடிவம் ஆக்கிய ஜோதிராவ் புலே என்பவரின் மனைவி ‘சாவித்ரிபாய் புலே’ ஆவார். இவர்கள், இருவரும் பெண்களுக்கான முதல் பள்ளியை 1848ஆம் ஆண்டு தொடங்கினர். அந்தப் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாப் புலே ஆவார்.
- இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவர், விஜயலட்சுமி பண்டிட் ஆவார். மேலும், அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற முதல் பெண், அன்னை தெரசா ஆவார்.
- முறையற்ற நடவடிக்கையில் செய்யப்படும் விளம்பரங்கள்: விற்பனை செய்யப்படும் பொருள் திரும்பப் பெறப்பட மாட்டாது அல்லது பொருள்களை மாற்ற இயலாது அல்லது எந்தச் சூழலிலும் பணம் திருப்பித்தரப்பட மாட்டாது ஆகியவை முறையற்ற விளம்பரங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
- நாட்டுரிமைக்கும் குடியுரிமைக்கும் இடையே உள்ள வேறுபாடு: பூர்வீகம், பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாகப் பெறும் நிலை ‘நாட்டுரிமை’எனப்படுகிறது. குடியுரிமை என்பது சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு, ஒருநாட்டின் அரசாங்கத்தால், தனி நபருக்கு வழங்கப்படுவது ‘குடியுரிமை’எனப்படுகிறது. ஒருவர் தனது நாட்டு உரிமையை மாற்ற இயலாது. ஆனால், தனது குடியுரிமையை மாற்றமுடியும்.
டாபிக்ஸ்