தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: மக்களே எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை எங்கெங்கு கனமழை பெய்யக்கூடும்?.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

Weather Update: மக்களே எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை எங்கெங்கு கனமழை பெய்யக்கூடும்?.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

Karthikeyan S HT Tamil

Oct 04, 2024, 05:10 PM IST

google News
TN Weather Update: தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
TN Weather Update: தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

TN Weather Update: தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

TN Weather Update:தமிழகத்தில் பல இடங்களில் வெயில் வாட்டி வரும் நிலையில், அக்டோபர் மாதம் 2 அல்லது 3ஆவது வாரத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 8-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

5-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திண்டுக்கல், தேனி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

6-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம்,தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

7-ம் தேதி கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளிலும், 8-ம் தேதி கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி, ஏலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் தலா 9 செமீ, திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு, ஆம்பூர் ஆகிய இடங்களில் தலா 8 செமீ, திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டபட்டி, வாணியம்பாடி, கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடை, கள்ளக்குறிச்சி மாவட்டம் வெங்கூர் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்." இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை