தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Special: வீழ்ந்தவரை எழுந்திடத் தூண்டும் குறியீடு 'தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை'

HT SPecial: வீழ்ந்தவரை எழுந்திடத் தூண்டும் குறியீடு 'தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை'

Karthikeyan S HT Tamil
May 13, 2023 07:00 AM IST

Thanjavur Thalayati Bommai: தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் தலையாட்டி பொம்மை தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுபவை என்றால் மிகையல்ல.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

ட்ரெண்டிங் செய்திகள்

தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் தட்டு, தஞ்சாவூர் ஓவியம் என பலவற்றிற்கும் பெயர் பெற்றிருந்தாலும் தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை அம்மண்ணின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுபவை என்றால் மிகையல்ல.

19-ஆம் நூற்றாண்டில் சரபோஜி மன்னன் காலத்தில் காவிரி ஆற்றின் களிமண்ணில் பிறந்த சிறு பொம்மைக் கோலம் இது. காவிரிக் கரையோர களிமண் கொண்டு செய்யப்படும் இப்பொம்மைகள் உலகப் புகழ் பெற்றவை ஆகும்.

தலையாட்டி பொம்மை என்பது 'ராஜா மற்றும் ராணி' ஆகிய இரண்டு பொம்மைகளையும் குறிக்கும் பொதுப்பெயராக உள்ளது. காவிரி ஆற்றின் களிமண்ணை கிண்ணம் போன்ற வடிவமைப்பில் நிரப்பி இரண்டு நாட்கள் நிழலிலும் பின் இரண்டு நாட்கள் வெயிலிலும் உலர வைக்கப்படுகிறது. அடிப்பகுதியில் பெரியதாகவும் எடை மிகுந்ததாகவும் மேற்புரம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகிறது. தொடர்ந்து, உப்புத்தாள் தேய்ப்பும், வண்ணப்பூச்சும் அடுத்து நிகழும்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை எந்தப் பக்கம் சாய்த்தாலும் கீழே விழாமல் ஆடும். அதற்கான தனிச்சிறப்புடன் இந்த பொம்மையின் அடிப்பாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பொம்மைகள் சாய்த்து தள்ளினாலும் கீழே விழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும். புவிஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப செங்குத்தாக இயங்கும் வகையில் இவை வடிவமைக்கப்படுகின்றன. எத்திசையில் வீழ்த்தினாலும் எழுந்து எழுந்து சிரிக்கும். வீழ்ந்தவரை எழுந்திடத்தூண்டும் குறியீடாக அது சிரிக்கும்.

தஞ்சாவூர் தந்த இனிய கலைப்பொருள், எளிய கலைப்பொருள், கொலுவில் இடம்பெறும். யார் முகத்திலும் புன்னகை வரவழைக்கும். வாங்க நினைத்தால் யாரும் வாங்கலாம். எப்படிச் சாய்த்தாலும் எழுந்து நின்று புன்னகைக்கும். பார்ப்பவரின் அகத்திலும் முகத்திலும் ஒரு பாசிடிவ் அலையைப் பாய்ச்சும்.

ராஜா- ராணி பொம்மைகள், நடன மங்கை பொம்மைகள், தாத்தா- பாட்டி பொம்மைகள் என தற்போது விதவிதமான தலையாட்டி பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன. அக்காலத்தில் களிமண்ணைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பொம்மைகள், தற்போது களிமண்ணுக்குப் பதிலாக காகிதக் கூழும் மரத்தூள் கலவைகளும் பிளாஸ்டர் ஆப் பாரீஸூம் பிளாஸ்டிக்கும் இன்றைய தலையாட்டிப் பொம்மைகளில் பயன்படுத்தப்படுகின்றன. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு பெருமை சேர்க்கும் விதமாக புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024