தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Church Festival: கொடியேற்றத்துடன் தொடங்கியது புனித இருதய அன்னை திருவிழா!

Church Festival: கொடியேற்றத்துடன் தொடங்கியது புனித இருதய அன்னை திருவிழா!

Karthikeyan S HT Tamil

Aug 31, 2022, 01:13 PM IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, பழமை வாய்ந்த "புனித இருதய அன்னை" ஆலய திருவிழாவின் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, பழமை வாய்ந்த "புனித இருதய அன்னை" ஆலய திருவிழாவின் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, பழமை வாய்ந்த "புனித இருதய அன்னை" ஆலய திருவிழாவின் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் புனித இருதய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் இத்திருவிழா நடைபெறும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather : தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை கொட்ட போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை!

Savukku Shankar Arrested : பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது - காரணம் இதுதான்!

Weather Update: ‘மக்களே உஷார்! மீண்டும் வீசப்போகும் வெப்ப அலை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது பெரியசாமிபுரம். இங்குள்ள புனித இருதய அன்னை ஆலயம், 123 ஆண்டுகளை கடந்து மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது. பழமை வாய்ந்த புனித இருதய அன்னை ஆலயத் திருவிழாவின் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதை முன்னிட்டு திருக்கொடியானது ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக கிராமம் முழுவதும் எடுத்துவரப்பட்டு பின்னா் ஆலயத்தை வந்ததடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கொடிக்கு அருட்தந்தை மற்றும் பங்கு தந்தைகள் புனிதம் செய்துவைத்தனா். சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்தில், திருவிழாவிற்கான திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

<p>புனித இருதய அன்னை திருவிழா கொடியேற்றம்</p>

கொடியேற்ற நிகழ்ச்சியில் கிராம மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா். கொடியேற்று விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

<p>பெரியசாமிபுரம் புனித இருதய அன்னை திருவிழா தொடங்கியது</p>

முன்னதாக நேற்று மாலை 3 மணியளவில் கொடிமரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழா சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகின்றன. திருவிழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்