தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Thank You For Choosing Me As General Secretary Of Aiadmk - Edappadi Palaniswami Interview

AIADMK: 'இனி நான் தான் பொதுச்செயலாளர்’ எடப்பாடி ஹேப்பி பேட்டி!

Kathiravan V HT Tamil

Mar 28, 2023, 11:37 AM IST

AIADMK General Secretary: கழக பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்ததற்காக அதிமுகவின் அனைத்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி - எடப்பாடி பழனிசாமி பேட்டி
AIADMK General Secretary: கழக பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்ததற்காக அதிமுகவின் அனைத்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி - எடப்பாடி பழனிசாமி பேட்டி

AIADMK General Secretary: கழக பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்ததற்காக அதிமுகவின் அனைத்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி - எடப்பாடி பழனிசாமி பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என கடந்த மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி எம்.எல்.ஏக்கள் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை..அறநிலையத்துறை அளித்த விளக்கம் இதோ..!

Stone Quarry Explosion: தமிழகத்தை உலுக்கிய கல்குவாரி வெடிவிபத்து.. எப்ஐஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Weather update: சுட்டெரிக்கும் வெயில் .. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை

Today Gold Rate : என்னது மீண்டுமா.. தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து விற்பனை!

மேலும் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிக் குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கி உள்ளார்.

அதில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை மற்றும் பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை கோரும் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதான வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ் மகன் உசேன் ஆகியோருக்கு அவசாகம் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். பொதுச்செயலாளர் வெற்றி சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கழகப்பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்ததற்காக அதிமுகவின் அனைத்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி என்றார்.

கேள்வி:- தேர்தல் முடிவு எப்போது வரும்?

தேர்தல் நடத்தும் அலுவலர், ஆணையாளர் ஆகியோர் கழக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவித்துவிட்டார்கள்

கேள்வி:- இந்த நொடியில் இருந்து நீங்கள்தான் பொதுச்செயலாளரா?

ஆணையாளர் வெற்றி பெற்றார்கள் என அறிவித்ததில் இருந்து அதிமுகவின் அனைத்து தொண்டர்களால் பொதுச்செயலாளராளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

டாபிக்ஸ்