தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamilnadu And Puducherry Bar Council Banned 9 Lawyers

9 lawyers banned: ஒன்பது வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை! பார் கவுன்சில் அதிரடி

Dec 06, 2022, 01:39 PM IST

தமிழகம் முழுவதும் ஒன்பது வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஒன்பது வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஒன்பது வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு்பதாவது:

ட்ரெண்டிங் செய்திகள்

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை..அறநிலையத்துறை அளித்த விளக்கம் இதோ..!

Stone Quarry Explosion: தமிழகத்தை உலுக்கிய கல்குவாரி வெடிவிபத்து.. எப்ஐஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Weather update: சுட்டெரிக்கும் வெயில் .. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை

தனது கட்சிக்காரரிடம் பெருந்தொகையை கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்ட நந்தகோபாலன், குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த பிரபு ஆகியோர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி பணி நியமன உத்தரவு வழங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கடலூரை சேர்ந்த பெருமாள், உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த ரமேஷ், பொன் பாண்டியன், திருவாரூர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய முத்தாட்சி ஆகியோருக்கும் வழக்கறிஞர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கில் தொடர்புடைய சென்னை சேர்ந்த ரோஜா ராம்குமார் மற்றும் மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன் ஆகியோருக்கு தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.