Vinesh Phogat: ’வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் தர முடியாது!’ விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் திட்டவட்டம்!-vinesh phogat loses appeal against disqualification from gold medal bout - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Vinesh Phogat: ’வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் தர முடியாது!’ விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் திட்டவட்டம்!

Vinesh Phogat: ’வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் தர முடியாது!’ விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் திட்டவட்டம்!

Kathiravan V HT Tamil
Aug 15, 2024 02:22 PM IST

ஒலிம்பிக் தகுதி நீக்கத்தை எதிர்த்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Vinesh Phogat: ’வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் தர முடியாது!’ விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் திட்டவட்டம்!
Vinesh Phogat: ’வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் தர முடியாது!’ விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் திட்டவட்டம்! (PTI)

கடந்த வாரம் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்த இறுதிப் போட்டியில் வினேஷ் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருந்ததற்காக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் PT உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்த அமைப்ப (UWW) மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு (IOC) எதிரான மல்யுத்த வீரர் வினேஷ் போகத்தின் மேலுமுறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறி உள்ளார். இந்த நிராகரிப்பு வினேஷ் போகத்திற்கும். குறிப்பாக விளையாட்டு சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். 

வினேஷ் போகத்தின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதால், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் உட்பட ஆறு பதக்கங்களை இந்தியா பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம்

29 வயதான வினேஷ் போகத், ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் ஆவார்.

பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்து இருந்த நிலையில் அதிக எடை இருந்ததன் காரணமாக மல்யுத்த இறுதி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பட்டினி கிடப்பது, தண்ணீர் உள்ளிட்ட திரவ பொருட்களை தவிர்ப்பது மற்றும் இரவு முழுவதும் விழித்திருந்து வியர்வையை வெளியேற்றுவது உள்ளிட்ட தீவிரமான எடை குறைப்பு நடவடிக்கைகளில் வினேஷ் போகத் ஈடுபட்டாலும் அது அவருக்கு பலன் அளிக்கவில்லை.

மேல்முறையீடு செய்த போகத்

இருப்பினும், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் மேல்முறையீடு செய்தார். அனுமதிக்கப்பட்ட எடையில் இருந்து 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் தனக்கு கூட்டு முறையில் வெள்ளிப்பதக்கம் தர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்து உள்ளார்.

இந்த சம்பவம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து இந்திய அணி பதக்கம் வெல்லும் என்ற கனவுடன் காத்திருந்த இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்திய வீராங்கணை தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தங்க பதக்கம் அமெரிக்க வீரங்கனை சாராவுக்கு வழங்கப்படும் என்றும், வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என்றும் 2 பேருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்றும் ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மல்யுத்த விளையாட்டு குடும்ப பின்னணி

இந்தியாவின் புகழ்பெற்ற போகத் மல்யுத்த குடும்பத்திலிருந்து வந்தவர் தான் வினேஷ் போகத். தனது உறவினர்களான கீதா போகத் மற்றும் பபிதா குமாரி ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மல்யுத்து விளையாட்டில் தனக்கென தனித்த இடத்தையும் பிடித்துள்ளார்.

மல்யுத்த விளையாட்டை இவருக்கு அறிமுகப்படுத்தியது, இவரது மாமாவும் முன்னாள் மல்யுத்த வீரருமான மகாவீர் சிங் போகத். மல்யுத்தத்த விளையாட்டானது ஆண்களுக்கான விளையாட்டு என கருதிய காலட்டத்தில் பல்வேறு எதிர்ப்பையும் மீறி வினேஷ் போகத்தை களமிறங்கிய மகாவீர் சிங் போகத் வெற்றியும் கண்டார்.

வினேஷ் ஒன்பது வயதாக இருந்தபோது தனது தந்தையின் அகால மரணத்தையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், வினேஷ் மல்யுத்த விளையாட்டில் சிறந்த வழிகாட்டுதல்களுடன் வெற்றி நடை கண்டார்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.