தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamil Nadu, Puducherry And Karaikal Will Receive Light To Moderate Rain With Thundershowers

Rain Alert : மக்களே கவனமா இருங்க.. இந்த பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் மழை!

Divya Sekar HT Tamil

Feb 04, 2023, 08:31 AM IST

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில், குமரிக்கடலில் சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்பட்டது.இதனால் மாநிலத்தில் பரவலான இடங்களில் நல்ல மழை பெய்தது. 

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ட்ரெண்டிங் செய்திகள்

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை..அறநிலையத்துறை அளித்த விளக்கம் இதோ..!

Stone Quarry Explosion: தமிழகத்தை உலுக்கிய கல்குவாரி வெடிவிபத்து.. எப்ஐஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Weather update: சுட்டெரிக்கும் வெயில் .. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை

குறிப்பாகத் தஞ்சை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களில் மழை சற்று அதிகமாகவே பெய்தது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துவிட்டதால் மழை அப்படியே மெல்லக் குறையும் என்றே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும். இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (பிப்.5) முதல் வரும் பிப்.7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்