IAS Transfer: ‘மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு!’ இத்தனை அதிகாரிகள் மாற்றமா? அடேங்கப்பா!
Jul 22, 2024, 08:02 PM IST
ஜூலை மாதத்தில் இரண்டாவது முறையாக ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கெனவே ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடைபெற்று உள்ள நிலையில், தற்போது மீண்டும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டு உள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஜூலை 16ஆம் தேதி அன்று 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டு இருந்தார்.
அப்போது, தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். கள்ளச்சாராய மரணங்கள், ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சுட்டிக்காட்டி தமிழக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் ஐஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் நடைபெற்று உள்ளது.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
ஆவடி மாநகராட்சி ஆணையர் எஸ்.சேக் அப்துல் ரஹ்மான் ஐ.ஏ.எஸ், நகராட்சி நிர்வாக துறையின் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி ஐ.ஏ.எஸ், வணிக வரித்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கே.கற்பகம் ஐ.ஏ.எஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறையின் இணை செயலாளராக நியமனம்.
தமிழ்நாடு கைவினை பொருட்கள் வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநர் ஆக உள்ள கவிதா ராமு ஐ.ஏ.எஸ், அருங்காட்சியகங்கள் துறையின் இயக்குநர் ஆக நியமனம்.
நிதித்துறை இணை செயலாளர் மாற்றம்
பவர்பின் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆர்.அம்பலவானன், தொழில் முனைவு மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் ஆக நியமனம்.
நிதித்துறை இணை செயலாளர் ஹெச்.கிருஷ்ணனுன்னி, கணக்கு மற்றும் கருவூலத்துறையின் ஆணையர் ஆக நியமனம்.
திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா ஐ.ஏ.எஸ், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஆக நியமனம்.
ஒசூர் மாநகராட்சிக்கு புதிய ஆணையர்
இணை தேர்தல் ஆணையர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஐ.ஏ.எஸ், ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஆக நியமனம்.
பொதுத் துறையின் துணை செயலாளர் எஸ்.அனு ஐ.ஏ.எஸ், கடலூர் மாநகராட்சி ஆணையர் ஆக நியமனம்.
நாகப்பட்டினம் கூடுதல் ஆட்சியர் ரஞ்சீத் சிங் ஐ.ஏ.எஸ், சேலம் மாவட்ட ஆட்சியர் ஆக நியமனம்.
கைத்தறித்துறைக்கு புதிய ஆணையர்
மாநில விருந்தினர் மாளிகையின் வரவேற்பு அலுவலர் எஸ்.கந்தசாமி ஐ.ஏ.எஸ், ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமனம்.
தமிழ்நாடு குடிமை பொருட்கள் வழங்கல் கழகத்தின் பொது மேலாளர் ஆர்.சதீஷ் ஐ.ஏ.எஸ், ஈரோடு கூடுதல் ஆணையராக நியமனம்.
கைத்தறித் துறை ஆணையர் கே.விவேகானந்தன் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு ஊரக நிதி மற்றும் உட்கட்டமைப்பு துறையின் மேலாண் இயக்குநர் ஆக நியமனம்.
தமிழ்நாடு ஊரக நிதி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் ஹனீஷ் சோப்ரா ஐ.ஏ.எஸ், புதிய திருப்பூர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் ஆக நியமனம்.
சி.எம்.டி.ஏவுக்கு புதிய சி.இ.ஓ
தமிழ்நாடு பொது துறையின் கூடுதல் செயலாளர் ஏ.சிவகனம் ஐ.ஏ.எஸ், சிஎம்டிஏ தலைமை செயல் அலுவலர் ஆக நியமனம்.
தமிழ்நாடு தொழில்முனைவு மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ், கைத்தறி துறை மேலாண் இயக்குநர் ஆக நியமனம்.
டாபிக்ஸ்