தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பள்ளி கல்வித்துறையின் கீழ் சிறப்பு பள்ளிகள்-டிச. 3 இயக்கம் முதல்வருக்கு கோரிக்கை

பள்ளி கல்வித்துறையின் கீழ் சிறப்பு பள்ளிகள்-டிச. 3 இயக்கம் முதல்வருக்கு கோரிக்கை

Mar 21, 2023, 02:47 PM IST

Tamilnadu: சிறப்பு குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் நடத்தவும், பராமரிக்கவும் பள்ளி கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
Tamilnadu: சிறப்பு குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் நடத்தவும், பராமரிக்கவும் பள்ளி கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

Tamilnadu: சிறப்பு குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் நடத்தவும், பராமரிக்கவும் பள்ளி கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

சிறப்பு குழந்தைகளுக்காக இயக்கப்படும் பள்ளிகளை பள்ளி கல்வித்துறைக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என டிசம்பர் 3 இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் தீபக் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு,

ட்ரெண்டிங் செய்திகள்

Captain Vijayakanth: ’நாளை விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!’ கேப்டன் கோயில் வரை பிரேமலதா செய்யப்போகும் சம்பவம்!

Weather Update: ‘8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!’

EPS, DMK Government: திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை..இன்னும் இந்த ஆட்சி தொடர்ந்தால்- விளாசும் இபிஎஸ்!

Weather Update: சென்னையில் சட்டென மாறிய வானிலை..14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்!

"டிசம்பர் 3 இயக்கமானது கடைநிலை மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகளை பெற்று தந்து வருகிறது. சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி மற்றும் அடிப்படை தேவைகளை தெரிந்துக் கொள்வதற்கு பயிற்சியின் மூலம் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இக்குழந்தைகளுக்கு நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் வெறும் சிறப்பு இல்லமாக மாறி பராமரிப்பு மட்டுமே செய்யும் இடமாக மாறி புரையோடி உள்ளது. குழந்தைகளுக்கான நவீன கருவிகளைக் கொண்டு பயிற்சிகள் மற்றும் கல்வி அளிப்பதில் பெரும் பங்கு பெறுவதில்லை. குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும், சுயதேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் தொடர்ந்து கல்வி தேவைப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சிறப்பு குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் நடத்தவும், பராமரிக்கவும் பள்ளி கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் தினந்தோறும் குழந்தைகளுக்கு என்ன மாதிரி வகுப்புகள் எடுக்க வேண்டுமென்று படிப்பதில்லை. அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வரும்போது, சிறப்பு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு நேரடி பார்வையில் கொண்டு வரப்படும். இதுபோன்ற பயிற்சிகள் சிறப்பு ஆசிரியர்களுக்கு வழங்கும் போது குழந்தைகளின் நிலைகள் முன்னேற்றம் அடையும். எனவே கணம் ஐயா அவர்கள் சிறப்பு பள்ளிகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வழிவகை செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்