தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly: ‘வரும் ஜூன் 24ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குகிறது’ - சபாநாயகர் அப்பாவு

TN Assembly: ‘வரும் ஜூன் 24ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குகிறது’ - சபாநாயகர் அப்பாவு

Marimuthu M HT Tamil

Jun 07, 2024, 02:24 PM IST

google News
TN Assembly: வரும் ஜூன் 24ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
TN Assembly: வரும் ஜூன் 24ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

TN Assembly: வரும் ஜூன் 24ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

TN Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் ஆகியுள்ளன. இதனால், அரசு இயந்திரம் வழக்கம்போல் செயல்படத்தொடங்கியுள்ளது.

வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்:

இந்நிலையில் வரும் ஜூன் 24ஆம் தேதி முதல், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்றும், அன்று முதல்  மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்றும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். அதற்கு முன், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்தலாம் என முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில் இம்முறை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 25 நாட்களுக்கு மேல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடக்கும் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2024ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடந்தது என்ன?:

இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் நடந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்துக்குப் பின், பிப்ரவரி 13ஆம் தேதி , நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிட ரமணன், கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம். ராஜேந்திரன், முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்த் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதன்பின்னர் ஆளுநர் உரைமீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்றது.

அதன்பின், பிப்ரவரி 15ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் பதிலளித்தார். பின், பிப்ரவரி 19ஆம் தேதி, நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதன்பின், பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதன்பின் பிப்ரவரி 21ஆம் தேதி நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதன்பின் பிப்ரவரி 22ஆம் தேதி பதிலுரையுடன் அந்த கூட்டத்தொடர் முடிந்தது.

2024 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடந்த பரபரப்பு:

2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்கத் தொடங்கியபோது, தமிழ்நாடு அரசின் சாதனைத் திட்டங்களை முழுவதும் புறக்கணித்தார். அதன்பின், ஆளுநர் வாசிக்காத உரையை சபாநாயகர் அப்பாவு முழு உரையை வாசித்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:

  • கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், கோவையில் மாபெரும் நூலகம் 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் திறக்கப்பட்டது எனக் கூறினார்.
  • மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 13 சட்ட முன்வடிவுகளும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்தமுறையும் பல புதுத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி