TN Assembly: ’உதயகுமார் மனைவிக்கு மாதம் 1000 ரூபாய் வேணுமா?’ சபாநாயகர் அப்பாவு கேள்வி!
”மகளிர் உரிமை தொகை வழங்குவதில் ஏழை எளிய பெண்கள் விடுப்பட்டு இருப்பதாகவும், வசதிபடைத்த குடும்பத் தலைவர்கள் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது”
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் அதிமுக சார்பில் பேசிய முன்னாள் வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமார் பேசுகையில், மகளிர் உரிமை தொகை வழங்குவதில் ஏழை எளிய பெண்கள் விடுப்பட்டு இருப்பதாகவும், வசதிபடைத்த குடும்பத் தலைவர்கள் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதலமைச்சர் அவர்கள் ஒரு கோடி பேருக்கு உரிமை தொகை என அறிவித்தது உண்மை, ஆனால் அது 28 மாதங்கள் கழித்து. ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்து தேர்தல் அறிக்கை தந்த போது அனைத்து குடும்ப அட்டைகளுக்கு வழங்குவோம் என கூறி இருந்தார்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, உதய்குமார் வீட்டம்மாவுக்கு மாதம் 1000 ரூபாய் வேண்ணுமா?; அப்பாவு வீட்டு அம்மாவுக்கு 1000 ரூபாய் வேணுமா? மனசாட்சியை தொட்டு, சாதி, மதம், இனம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி
என்று பார்க்காமல் குறைப்பாடுகள் உங்கள் கவனத்திற்கு வந்தால் சுட்டிக்காட்ட வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயக்குமார், முதலமைச்சர் மேல் முறையீடு செய்யலாம் என்று சொல்லி உள்ளார்கள். மீண்டும் மேல் முறையீடு செய்ய முன் வரும் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் சர்வர் வேலை செய்யததால் மக்கள் எங்கே சென்று விண்ணப்பிப்பது என்று தெரியவில்லை என கூறினார்.
நியாமான தகுதிகள் இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் விவரங்களை ஆர்.பி.உதயக்குமார் கொடுத்தால் அதற்கான நடவடிக்கைகள் நிச்சயமாக எடுப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.