தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Sasikala Talks About Making Edappadi Palaniswami The Chief Minister

சாதி பார்த்திருந்தால் ஒரு கவுண்டரை முதல்வர் ஆக்கி இருப்பேனா? சசிகலா கேள்வி

Kathiravan V HT Tamil

Apr 14, 2023, 05:34 PM IST

ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால் ஒதுக்குவீர்களா? என்ற கேள்விக்கு வந்தவர்களை வாழ வைப்பதும் வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதும்தான் தமிழ்நாடு என பதில்
ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால் ஒதுக்குவீர்களா? என்ற கேள்விக்கு வந்தவர்களை வாழ வைப்பதும் வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதும்தான் தமிழ்நாடு என பதில்

ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால் ஒதுக்குவீர்களா? என்ற கேள்விக்கு வந்தவர்களை வாழ வைப்பதும் வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதும்தான் தமிழ்நாடு என பதில்

சென்னையில் செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் பதில்களும்,

ட்ரெண்டிங் செய்திகள்

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை..அறநிலையத்துறை அளித்த விளக்கம் இதோ..!

Stone Quarry Explosion: தமிழகத்தை உலுக்கிய கல்குவாரி வெடிவிபத்து.. எப்ஐஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Weather update: சுட்டெரிக்கும் வெயில் .. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை

கேள்வி:- ஏப்ரல் 24ஆம் தேதி ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டில் அழைப்பு கொடுத்தால் பங்கேற்பீர்களா?

அழைப்பு கொடுத்த பிறகு சொல்கிறேன்

கேள்வி:- அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறதே?

என்ன நடந்தாலும் ஒன்றை மட்டும் சொல்கிறேன், சிவில் நீதிமன்றத்தின் முடிவு தெரியாமல் எந்த முடிவும் நிரந்தரம் இல்லை என்று உச்சநீதிமன்றமே சொல்லி உள்ளது.

கேள்வி:- உங்களையும் ஒரு குறிப்பிட்ட 3 பேரையும் தவிர்த்து யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார்களே?

அதனை எங்கள் கழக தொண்டர்களிடம் கேட்டால் தெரியும், ஏனென்றால் நான் எல்லோருக்கும் பொதுவானவள். நான் சாதியிலும் அப்படி நினைத்ததில்லை; அப்படி நினைத்திருந்தால் கவுண்டர் சமூதாயத்தை சேர்ந்தவரை முதலமைச்சராக நான் கொண்டு வந்து இருக்கமாட்டேன். என்னை பொறுத்தவரை எம்ஜிஆரின் தொண்டர்கள், அம்மாவின் தொண்டர்கள். நாங்கள் எல்லாம் அப்படி வளர்க்கப்பட்டவர்கள் என்னுடைய வழி தனி வழி

கேள்வி:- ஓபிஎஸ், நீங்கள், டிடிவி தினகரன் ஆகிய மூன்று பேரும் இணைய வேண்டும் என்ற குரல் எழுந்து வருகிறதே?

நான் ஆரம்பத்தில் இருந்தே எல்லோரும் இணைய வேண்டும் என்ற ஒன்றைத்தான் வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டில் நல்லது செய்ய வேண்டும் என்றால் அதிமுக ஒன்றாக இருந்தே ஆக வேண்டும்.

கேள்வி:- எதிர்க்கட்சி சரியாக செயல்படாதற்கு அதிமுகவின் உட்கட்சி பிரச்னை காரணமா?

அதிமுகவின் உட்கட்சி பூசலை திமுக எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதைத்தான் பார்க்கிறது. எல்லோரும் ஒன்று சேரக்கூடாது என்பதை திமுக சரியாக நகர்த்தி கொண்டு போகிறது. சட்டமன்றத்தில் ஓபிஎஸ் எழுந்து பேசும் போது, உடனே பக்கத்தில் இருந்த அதே அதிமுகவை சேர்ந்தவர்கள் எப்படி பேசவிடலாம் என்று கேட்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் என்பதால் பன்னீர் செல்வத்தை பேச சொன்னென் என்று சபாநாயாகர் சொல்கிறார். பன்னீர் செல்வம் அதிமுகதான் என்று சபாநாயகர் சொல்லவில்லை.

கேள்வி:- ஓ.பன்னீர் செல்வம் நேரம் கேட்டால் நேரம் ஒதுக்குவீர்களா?

வந்தவர்களை வாழ வைப்பதும் வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதும்தான் தமிழ்நாடு.