தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Ramadoss Tweet About Pasumpon Muthuramalinga Devar

Devar Jayanti : பசும்பொன் பெருமகனாரின் பங்கு ஈடு இணையற்றது - ராமதாஸ் புகழாரம்!

Divya Sekar HT Tamil

Oct 30, 2022, 10:59 AM IST

தேவர் பெருமகனார் ஆற்றிய பணிகளின் மூலம் அவர் எந்த நாளும் மக்களின் மனங்களில் வாழ்வார் என்பது உறுதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேவர் பெருமகனார் ஆற்றிய பணிகளின் மூலம் அவர் எந்த நாளும் மக்களின் மனங்களில் வாழ்வார் என்பது உறுதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தேவர் பெருமகனார் ஆற்றிய பணிகளின் மூலம் அவர் எந்த நாளும் மக்களின் மனங்களில் வாழ்வார் என்பது உறுதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயருக்கு எதிரான போரில் பொதுவாழ்க்கையிலும், அரசியலிலும் சாதனை படைத்த பசும்பொன் பெருமகனாரின் பங்கு ஈடு இணையற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Vikravandi: ’ஜூன் 1இல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலா? வேண்டவே வேண்டாம்!’ தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் எச்சரிக்கை!

Weather Update: ’நாளை முதல் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகரிக்க போகும் வெப்பம்! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

Today Gold Rate : நகைப்பிரியர்களே இன்று ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.80 உயர்வு.. முழு விவரம் இதோ!

Summer Rain Warning: ’கோடை மழையில் நனைய ரெடியா! இரவு 11.15 வரை 8 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ வானிலை மையம் அறிவிப்பு!

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் சாதனைகளை படைத்த பசும்பொன் பெருமகனார் அவர்களின் 115-ஆவது பிறந்தநாளும், 60-ஆவது குருபூசையும் கொண்டாடப்படும் இந்த நாளில் அவரை அனைவரும் போற்றி வணங்குவோம். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் அவரது பங்கு ஈடு இணையற்றது!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி வெற்றி பெற்றது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என பொதுவாழ்க்கையில் அவர் படைத்த சாதனைகள் ஏராளம்!

அனைத்துத் தரப்பு மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் தான் இன்று அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதற்கு காரணம். தேவர் பெருமகனார் ஆற்றிய பணிகளின் மூலம் அவர் எந்த நாளும் மக்களின் மனங்களில் வாழ்வார் என்பது உறுதி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

டாபிக்ஸ்