தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Ramadoss Tweet About Dearness Allowance For Transport Corporation Pensioners

Transport Corporation : “தீப ஒளி பரிசாக அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிடுக”

Divya Sekar HT Tamil

Oct 22, 2022, 11:05 AM IST

கடந்த இரு ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு தீப ஒளி பரிசாக அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை..அறநிலையத்துறை அளித்த விளக்கம் இதோ..!

Stone Quarry Explosion: தமிழகத்தை உலுக்கிய கல்குவாரி வெடிவிபத்து.. எப்ஐஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Weather update: சுட்டெரிக்கும் வெயில் .. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நவம்பர் மாத ஓய்வூதியத்தில் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டு 50 நாட்களாகி விட்ட நிலையில், அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது!

நவம்பர் மாத ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு இன்னும் குறுகிய காலமே உள்ளது. போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியது குறித்த அறிக்கையை நவம்பர் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை!

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் 89 ஆயிரம் பேருக்கு கடந்த 83 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல துறைகளின் ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு மட்டும் மறுப்பது நியாயமல்ல!

எனவே, போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு தீப ஒளி பரிசாக அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். கடந்த இரு ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! " என தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்