Pavalakodi : பவளவிழாவை நெருங்கும் பவளக்கொடி திரைப்படம் வெளியான நாள் இன்று
Apr 09, 2023, 05:57 AM IST
Tamil Movie : டி.ஆர்.மகாலிங்கம், டி.ஆர்.ராஜகுமாரி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடத்திருந்த பவளக்கொடி திரைப்படம் வெளியாகி 74 ஆண்டுகளாகி பவள விழா ஆண்டை அத்திரைப்படம் நெருங்குகிறது.
பவளக்கொடி, 1949 தமிழில் வெளிவந்த புராணக்கதையம்சம் கொண்ட திரைப்படம். இப்படத்தை எஸ்.எம்.ஸ்ரீராமலு தயாரித்து இயக்கியிருந்தார். இந்தப்படம் ராமனுக்கும், கர்ணனுக்கும் இடையே உள்ள கதையை சித்தரிப்பதாகும். இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் கர்ணனாக, டி.ஆர்.மகாலிங்கம் கிருஷ்ணனாக, என்.எஸ்.கிருஷ்ணன் ராமனாக, என்.எஸ்.நாராயண பிள்ளை லட்சுமணனாக, துரை பாண்டியன் துரியோதனனாக, சின்னசாமி யுதிஷ்ட்ரனாக, டி.ஆர்.பிள்ளை ராவணனாக, ஆனந்தா பரதனாக, ராதா கிருஷ்ணன் பீமனாக, டி.இ.வரதன் அர்ஜீனனாக, அக்கி நாராயணப்பிள்ளை சத்ருகனாக, டி.ஆர்.ராஜகுமாரி திரவுபதி/பவளக்கொடி, எம்.எஸ்.சரோஜினி பத்மாவதியாக, டி.ஏ.மதுரம் சீதாவாக என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த திரைப்படம்.
இந்தப்படத்திற்கு இளங்கோவன் திரைக்கதை அமைத்திருந்தார். பவளக்கொடி என்ற நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். ஏஸ். ராகவன் மற்றும் ஏ.எஸ்.திருமலை ஆகியோர் தயாரித்திருந்தார்கள். வி.கிருஷ்ணா ஒளிப்பதிவும், எஸ்.சூர்யா இந்தப்படத்தின் எடிட்டிங் வேலைகளையும் செய்திருந்தனர். இந்தப்படத்திற்கு சுப்புராமன் இசையமைத்திருந்தார்.
ராமனுக்கும், கர்ணனுக்கும் இடையே புரிதல் இல்லாமையை குறித்த கதை ஆகும். எனவே இந்தக்கதையை வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எழுதினார்கள். மேலும் அவர்கள் வியாசரின் மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு புராணக்கதை புத்தகங்களை நன்கு ஆராய்ந்து இந்தப்படத்தின் கதையை எழுதியிருப்பார்கள். உண்மை கதையைப்போலவே சித்தரிப்பதற்காக அதிகம் மெனக்கெட்டு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. டி.ஓய்.மின்னல்மிலு போன்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இந்த கதையை திறம்பட எழுதினார்கள்.
மேலும் இந்தப்படத்தில் நடிப்பதற்காக நடிகர்களை தேர்ந்தெடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தினர். இந்தப்படத்தை ஸ்ரீராமலு நாயுடுவின் கோயமுத்தூர் பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. இந்தப்படம் 1949ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி வெளியானது. இது பாக்ஸ் ஆபிசில் பிளாக் பஸ்டர் படமாக ஆனது.
இந்தப்பவளக்கொடி படத்திற்கு முன்னர் இதே பெயருடைய படம், 1934ம் ஆண்டு இந்திய திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் முதல் படமாக வெளியானது. இந்தப்படத்தில் 55 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த திரைப்படம் 100 வாரங்கள் ஓடியது. அந்தக்கால படங்களில் கதையின் தொடர்ச்சியாகவே பாடல்கள் இருக்கும். பின்னர் பாடல்களை மக்கள் பெரிதாக ரசிக்காததால், பாடல் குறைந்து கதைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதேபோன்று பவளக்கொடி என்ற பெயரில் 2003ம் ஆண்டு ஒரு படம் வெளியானது. அந்தப்படத்தில் சின்னத்திரை கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
டாபிக்ஸ்