தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Mhc Dismissed Journalist Savukku Shankar Case Seeking Permission To Provide Books For Jail Inmates

MHC: விளம்பர நோக்கத்துக்கு மனு...சவுக்கு சங்கர் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு

Feb 20, 2023, 05:38 PM IST

Savukku Shankar Case Dismissed: கடலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு புத்தகம் வழங்குவதற்கு அனுமதி அளிக்க கோரி பிரபல ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "கடலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் படிப்பதற்காக ரூ. 15 ஆயிரம் மதிப்பு புத்தகங்களை இலவசமாக வழங்க முடிவு செய்து, அதனை பெற்றுக்கொள்ளுமாறு சிறைத்துறை டிஜிபி கடிதம் எழுதியுள்ளேன்.

ட்ரெண்டிங் செய்திகள்

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை..அறநிலையத்துறை அளித்த விளக்கம் இதோ..!

Stone Quarry Explosion: தமிழகத்தை உலுக்கிய கல்குவாரி வெடிவிபத்து.. எப்ஐஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆனால் அரசியல் காரணங்கள் காரணமாக நான் அளித்த புத்தகங்களை ஏற்றுக்கொள்ள சிறைத்துறை மறுத்துள்ளது. எனது நான் வழங்கிய புத்தகங்களை ஏற்றுக்கொள்ள சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "இந்த புத்தகங்களை நீங்கள் படித்திருக்கிறீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

விளம்பர நோக்கத்துக்காக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இந்த புத்தகங்கள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

டாபிக்ஸ்