தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mhc: சூனியம் வைத்ததாக பெரியம்மாவை கொலை செய்தவரின் ஆயுள் தண்டனை ரத்து

MHC: சூனியம் வைத்ததாக பெரியம்மாவை கொலை செய்தவரின் ஆயுள் தண்டனை ரத்து

Feb 28, 2023, 11:53 AM IST

பில்லி சூனியம் வைத்ததாக பெரியம்மாவை கொலை செய்து ஆயுள் தண்டனை விதிக்கபட்டவரின் மேல் முறையீடு மனு விசாரணையில் அவரது தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் தங்களது குடும்பத்தில் ஆண் வாரிசு இருக்ககூடாது என்பதற்காக பெரியம்மா பில்லி, சூனியம் வைத்துள்ளார் எனக் கூறி அவரை கடந்த 2009ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் போலீசார் சதீஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather : தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை கொட்ட போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை!

Weather Update: ‘மக்களே உஷார்! மீண்டும் வீசப்போகும் வெப்ப அலை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

இந்த வழக்கை விசாரித்த கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், சதீஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பார் மாதம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சதீஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இதையடுத்து மேல் முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல் குமார் அமர்வு, சதீஷுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

தங்களது உத்தரவில், சதீஷ் கொலை செய்தார் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிருபிக்கப்படவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

டாபிக்ஸ்