தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Maha Deepam Lighted In Tiruvannamalai

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றம்

I Jayachandran HT Tamil

Dec 06, 2022, 10:38 PM IST

திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் கடல் போல் காட்சியளிக்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

LPG Price : குட் நியூஸ் மக்களே.. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு.. வெளியான புதிய விலைப்பட்டியல்!

Weather Update : இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு.. ஆனால் இங்கு வெயில் கொளுத்தும்!

Weather Update: ’ஊட்டியில் வெயில் உச்சம்! இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை!’ வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை!

Bachelor of Visual Arts: ’சினிமாவில் சாதிக்க ரெடியா!’ எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் அறிய வாய்ப்பு!

திருவண்ணாமலை அருணாசேலேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்து வருகின்றனர்.

அண்ணாமலையார் மலைடயை பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். இதுவரை 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்துள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை நகரில் எங்கு பார்த்தாலும் கடல் போல் பக்தர்களாகவே காட்சியளிக்கின்றனர்.