தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Madurai Aadeenam On Modi: ’தனிஈழ நாடு கேட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பேன்!’ மதுரை ஆதீனம் பகீர் பேட்டி!

Madurai Aadeenam on Modi: ’தனிஈழ நாடு கேட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பேன்!’ மதுரை ஆதீனம் பகீர் பேட்டி!

Kathiravan V HT Tamil

Jun 10, 2024, 04:53 PM IST

google News
Madurai Aadeenam Press Conference: நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துவிடும். அண்ணமலைக்கும் ஓட்டுக்கள் விழுந்து உள்ளது. ஆனால் இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு ஓட்டுப்போட்டுவிட்டனர். யார் கொன்றார்கள் என்பதை நான் சொல்லமாட்டேன் என மதுரை ஆதீனம் பேட்டி
Madurai Aadeenam Press Conference: நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துவிடும். அண்ணமலைக்கும் ஓட்டுக்கள் விழுந்து உள்ளது. ஆனால் இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு ஓட்டுப்போட்டுவிட்டனர். யார் கொன்றார்கள் என்பதை நான் சொல்லமாட்டேன் என மதுரை ஆதீனம் பேட்டி

Madurai Aadeenam Press Conference: நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துவிடும். அண்ணமலைக்கும் ஓட்டுக்கள் விழுந்து உள்ளது. ஆனால் இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு ஓட்டுப்போட்டுவிட்டனர். யார் கொன்றார்கள் என்பதை நான் சொல்லமாட்டேன் என மதுரை ஆதீனம் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பொறுப்பு ஏற்று உள்ள நிலையில், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிகர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று பாரத பிரதமர் மோடி அவர்கள் பொறுப்பு ஏற்று உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள், தோல்வி அடைந்தவர்களுக்கும் வாழ்த்துகள். தம்பி சீமானும், அண்ணாமலையும் நிறைய ஓட்டுகளை அளித்து உள்ளனர். 

இலங்கையிலே லட்சக்கணகான மக்களை கொன்று குவித்தவர்களை வெற்றி பெற்றுவிட்டனரே என்ற வருத்தம் எனக்கு தமிழ் மக்கள் மீது உள்ளது. நரேந்திர மோடி அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்தார். இந்திரா காந்தி தூக்கி கொடுத்த கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டு உடன் இணைக்க வேண்டும், ஈழத்தில் உள்ள தமிழர்களை பாதுகாக்க தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை பாரத பிரதமரிடம் வைக்கிறேன். 

கேள்வி:- ஏற்கெனவே இந்த கோரிக்கையை பிரதமரிடம் வைத்துள்ளீர்களே?

60 ஆண்டுகளாக யாரும் இதை செய்யவில்லையே, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு விவகாரம் பேசப்படவில்லை. இப்போதாவது பேசப்படுகிறது. 

மோடி பிரதமர் ஆனது ரொம்ப  மகிழ்ச்சி அளிக்கின்றது. இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து உள்ளார். இன்னும் நாட்டை மீட்டுக் கொடுக்க வேண்டும். 

கேள்வி:- கூட்டணி ஆட்சி ஏற்பட்டு உள்ளதே?

கூட்டணி ஆட்சி சரியாக வந்துவிடும். நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துவிடும். அண்ணமலைக்கும் ஓட்டுக்கள் விழுந்து உள்ளது. தமிழக மக்கள் முடிவு சரியானது, ஆனால் இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு ஓட்டுப்போட்டுவிட்டனர். ஆனால் யார் இலங்கை தமிழர்களை கொன்றார்கள் என்பதை நான் சொல்லமாட்டேன்.  இலங்கை தமிழர்களுக்கு நாடு கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்க சொல்லி சீமான் என்னிடம் சொன்னார். 

கேள்வி:- மோடி குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனரே?

ஆட்சி என்று இருந்தால் திட்டத்தான் செய்வார்கள், திட்டத்திட்ட திண்டுக்கல்லு, வைய வைய வைரக்கல்லு. எதையும் தாங்கும் இதயம் பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு. 

கேள்வி:- ராமர் கோயில் கட்டப்பட்ட அயோத்தியில் பாஜக தோல்வி அடைந்துவிட்டதே? 

காமராஜர், இந்திரா காந்தி ஆகியோர் தோல்வி அடைந்து உள்ளனர். அதெல்லாம் சகஜம். ஒரு வேளை பாஜக வெற்றி பெற்று இருந்தால், தாமரைக்கு ஓட்டு விழும்படி செய்துவிட்டார்கள் என்று சொல்லுவீர்கள். 

கேள்வி:-தனிப்பெருமான்மை கிடைக்காததால் மக்களிடையே அதிருப்தி இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

243 இடங்களை அவர்கள் பெற்று உள்ளதால் அதிருப்தி என்று சொல்ல முடியாது 60 வருஷம் ஆட்சியில் இருந்தவர்களே 99 இடங்களைத்தான் வென்று உள்ளனர்.

கேள்வி:- மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பீர்களா?

நிச்சயமாக பிரதமரை சந்திப்பேன். இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைப்பேன். 

கேள்வி:-பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவது ஏன்?

நான் என்ன தேர்தல் பிரச்சாரமா செய்தேன்?, நான் ஆசீர்வாதம் வழங்குகிறேன். மோடி அவர்கள் சிவபெருமான் மீது பக்தியாக உள்ளார். கடவுள் இல்லை என்று அவர் சொல்லவில்லையே. ஏதாவது ஒரு பிரதமர் ராமகிருஷ்ண மடத்தில் தரையில் படுத்து இருந்தாரா? அப்படி யாரும் செய்தது இல்லை. 

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை