Annamalai: ’அமைச்சர் ஆனால் அண்ணாமலை காலி! மாநில அரசியலில் துடைத்து எரியப்படுவார்!’ இடும்பாவனம் கார்த்திக் எச்சரிக்கை!
Modi oath event: ”தமிழ்நாட்டில் மொத்த உள்ள 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக மோடி இன்று பதவியேற்கிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.”

’மத்திய அமைச்சர் ஆனால் அண்ணாமலை காலி! மாநில அரசியலில் இருந்தே துடைத்து எரியப்படுவார்!’ இடும்பாவனம் கார்த்திக் எச்சரிக்கை!
அண்ணாமலை மத்திய அமைச்சரானால், மாநிலத் தலைவர் பதவியைப் பறிகொடுக்க நேரிடும்; மாநில அரசியலிலிருந்தே விலக நேரிடும் என நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்து உள்ளார்.
இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு விழா
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்த மெகா நிகழ்வு தேசிய தலைநகரான டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் ஃபோர்கோர்ட்டில் இரவு 7:15 மணிக்கு தொடங்க உள்ளது.
பதவியேற்பு விழாவில் பல்வேறு தொழில் வல்லுநர்கள் மற்றும் கலாச்சார கலைஞர்கள் உட்பட 8,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
