Kallakurichi: ’கள்ளுக்கடை திறக்கும் அவசியம் இல்லை! கள்ளச்சாரய மரணத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை’ போட்டு உடைத்த ரகுபதி!
Jun 22, 2024, 03:46 PM IST
Kallakurichi Hooch Tragedy: கள்ளகுறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் அரசு வெளிப்படையாக செயல்படுவதால் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
கள்ளுக்கடைகளை திறப்பதற்கான அவசியம் ஏதும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பு
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளக்குறிச்சியில் மெத்தனால் எனும் ரசாய கலவையை குடித்து இறந்துள்ளது வருந்ததக்கது, விரும்பத்தகாதது. 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததால், மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்துவிட்டோம், சட்டமன்றத்தில் ஏதாவது பிரச்னைகளை கிளப்ப வேண்டும் என்பதற்காக, சட்டமன்றத்தில் இல்லாத குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார்.
சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
முதலமைச்சர் பேச வாய்ப்பு தரவில்லை என்று சொல்கிறார். அதிமுக வெளிநடப்பு செய்த பிறகு, அதிமுகவினருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் பேசினார். கேள்வி நேரத்தில் பிரச்னைகளை எழுப்பமாட்டார்கள். வேண்டுமென்றே சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு உள்ளனர். அப்போது எதிர்கட்சித் தலைவர் பேச சபாநாயகர் வாய்ப்பு தந்தார்.
கடந்த ஆட்சியில் என்ன நடந்தது ?
கடந்த ஆட்சியில், நாங்கள் எழுந்தாலே வெளியில் தூக்கிபோடும் நிலை இருந்தது. ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட முதலமைச்சர் அவர்கள், அவர்களை மன்னித்து மீண்டும் பேரவைக்கு வர வேண்டும் என்று கூறினார். ஆனால் முதலமைச்சரும், பேரவைத் தலைவரும் எங்களை பேச வாய்ப்பு தரவில்லை என்று வெளியே வந்து பேசுகின்றனர்.
ஜீரோ ஹவரில் அவையை ஒத்திவைத்து விவாதிக்கலாம். கேள்வி நேரத்தில் இதை விவாதிக்க முடியாது. அரசியல் செய்ய வாய்ப்பு இல்லாததால், அரசியல் செய்ய வாய்ப்பு தேடுகின்றனர்.
யாராக இருந்தாலும் மன்னிக்கமாட்டோம்
உடனடியாக சிபிசிஐடி விசாரணை, ஒருநபர் நீதிபதி விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். யாராக இருந்தாலும் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கமாட்டோம். பண்ரூட்டில் நடந்த சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை நடத்தினார்களா?, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரம் வழங்கி உள்ளோம்.
சாத்தான் குளம் சம்பவத்தை மறைக்க பார்த்தால் நாங்கள் சிபிஐ விசாரணை கோரினோம். பென்னிக்ஸ் மூச்சுத்திணறாலும், ஜெயராஜ் உடல்நலம் பாதிப்பால் இறந்தால் என்று அன்றைய முதலமைச்சர் அறிக்கைவிட்டார்.
கள்ளுக்கடைக்கான அவசியம் இல்லை
நாங்கள் வெளிப்படைத் தன்மையோடு நடப்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை. கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் மீது குண்டர் சட்டம் போட்டு உள்ளோம். அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. கள்ளச்சாராயத்தை நாங்கள் ஏன் அனுமதிக்கப்போகிறோம். எங்களுக்கு என்ன தேவை உள்ளது. நாங்கள் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தி வருகின்றோம்.
திமுகவினருக்கு இருக்கும் தொடர்பை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார் என சொல்லி உள்ளனர். எம்.ஆர்.பியைவிட அதிகவிலைக்கு மது விற்கவில்லை. கள்ளுக்கடையை திறக்க வேண்டிய அவசியம் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
அதிமுக வெளிநடப்பு
முன்னதாக இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய உடன் இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் ‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்’ குறித்து விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் செய்தியாளர் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், இன்றைய தினம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டோம். ஆனால் சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.
பலமுறை நாங்கள் குரல் கொடுத்தோம். இது மக்களின் உயிர் பிரச்னை, தினந்தோறும் மக்கள் இறந்து கொண்டு இருக்கின்றனர். இதுவரை எத்தனை பேர் மது அருந்தி உள்ளனர். எத்தனை பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள், இதுவரை எத்தனை பேர் இறந்து உள்ளனர். இப்போது சிகிச்சையில் உள்ளவர்கள் நிலை என்ன என்பது குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால், பேச அனுமதி கேட்டோம். ஆனால் இன்றும் சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார் என கூறினார்.