தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சீமான் பணத்துக்கு விலை போய்விட்டார்.. கட்சியில் யாரும் வளரக் கூடாது என நினைக்கிறார்.. நா.த.க நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

சீமான் பணத்துக்கு விலை போய்விட்டார்.. கட்சியில் யாரும் வளரக் கூடாது என நினைக்கிறார்.. நா.த.க நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

Divya Sekar HT Tamil

Oct 01, 2024, 05:29 PM IST

Seeman : சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர். சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகி பிரபாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
Seeman : சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர். சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகி பிரபாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Seeman : சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர். சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகி பிரபாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு வைத்துள்ளனர். 

நாம் தமிழர் கட்சியில் யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார் என கிருஷ்ணகிரி மண்டல நா.த.க. ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கரு.பிரபாகரன் அறிவித்துள்ளார்.

கட்சியில் யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார்

கட்சியில் யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார்.. 14 ஆண்டுகளாக உழைத்த எங்களுக்கு வேட்பாளராக யாரை நிறுத்தனும்னு தெரியாதா? எங்கள் இளமைக் காலமே போச்சு என  சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகி பிரபாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கட்சி ஆரம்பித்த பொழுது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை. தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக வளர்ந்த பிறகு தற்போது செயல்பாடுகள் சரி இல்லை. யாருக்கும் அங்கிகாரம் கிடைக்க கூடாது என உழைத்தவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். 

சீமான் ஆலோசனை நடத்தவில்லை

தமிழகத்தில் எந்த பொருப்பாளரளையும் அழைத்து சீமான் ஆலோசனை நடத்தவில்லை. சீமான் பணத்துக்கு விலை போய்விட்டார் என கருதுகிறோம். செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் என்ற பெயரில் கையெழுத்து மட்டுமே வாங்கப்படுகிறது.

மாதம் 2.5 லட்சம் வாடகை, 3 பேருக்கு 15 வேலை ஆட்கள் என சொகுசாக வாழ்கிறார்கள், ஆனால் ஒரு மண்டல செயலாளர் மனைவி ஏரி வேலைக்கு தான் சென்று கொண்டிருக்கிறார்கள். கட்சியில் இருந்து விலகிய முன்னணி பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியை கட்டமைத்தால் இணைந்து செயல்பட தயார். இல்லையென்றால் விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய தமிழ் தேசிய இயக்கம் அமைக்கப்படும் என்றும் கூறினர்.

நிர்வாகிகளை கண்டு கொள்ளாமல் சீமான் இருக்கிறார்

கிருஷ்ணகிரி மாவட்டம் தாலுகா அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பத்திரிகையாளர் அரங்கில் நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் கரு பிரபாகரன் தனது ஆதரவாளர்களுடன் பத்திரிக்யாளர்களை சந்தித்தார்.

அப்போது கட்சிக்காக 14 வருடமாக சொந்தங்களை மறந்து உழைத்து வந்ததாகவும் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மொத்த நிர்வாகிகளை கண்டு கொள்ளாமல் சீமான் இருப்பதாகவும் எங்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்வது இல்லை என்றும் பிற கட்சிகளை எதிர்த்துப் பேசும் சீமான் அவர்களின் குடும்ப நிகழ்வுகளுக்கு சாதாரணமாக சென்று வருகிறார்.

தன்னைவிட யாரும் மிஞ்சுவிடக்கூடாது என செயல்படுகிறார்

மாவட்டத்தில் உள்ள நாங்கள் அப்படி செல்ல முடிவதில்லை. மாற்றுக் கட்சியில் பழைய நிர்வாகிகள் தொடர்ந்து நீடித்து கட்சிகளை வளர்த்து வரும் போது தன்னைவிட யாரும் மிஞ்சுவிடக்கூடாது என செயல்படுகிறார்.

கட்சியில் இருந்து வெளியேறிய நபர்களோடு இணைந்து தமிழ் தேசிய பொது உடமையோடு புதிய அரசியல் கட்டமைப்பு அடுத்த வருடம் மாவீரர் தினத்திற்குள் மூன்னேடுப்போம் எடுப்போம் என தெரிவித்தார்

கட்சியில் இருந்து விலகும் முக்கிய பொறுப்பாளர் விவரம் வருமாறு

கிருஷ்ணகிரி மண்டல செயலர் கரு ,பிரபாகரன்,

மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் இர்ஃபான் ,

மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ஐயப்பன்,

கிருஷ்ணகிரி தொகுதி தலைவர்திருமூர்த்தி,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் காசிலிங்கம்

பர்கூர் தொகுதி செயலாளர் அப்துல் ரகுமான்,

ஊத்தங்கரை தொகுதி செயலாளர்.ஈழமுரசு

காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் ,செல்வா

ஆகியோர் தங்களை கட்சியிலிருந்து விடுபட்டு கொள்வதாக கூட்டாக பேட்டி அளித்தனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை