Seeman : ‘கமிஷன் வாங்குவது.. லஞ்சம் பெறுவது.. மதுபானத்திற்கு ரூ.10 அதிகம் வாங்குவது தான் தியாகம்’ முதல்வரை சாடிய சீமான்!-naam tamilar party coordinator seeman reviews chief minister stalins reception of ex minister senthil balaji bail - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman : ‘கமிஷன் வாங்குவது.. லஞ்சம் பெறுவது.. மதுபானத்திற்கு ரூ.10 அதிகம் வாங்குவது தான் தியாகம்’ முதல்வரை சாடிய சீமான்!

Seeman : ‘கமிஷன் வாங்குவது.. லஞ்சம் பெறுவது.. மதுபானத்திற்கு ரூ.10 அதிகம் வாங்குவது தான் தியாகம்’ முதல்வரை சாடிய சீமான்!

HT Tamil HT Tamil
Sep 27, 2024 04:20 PM IST

Seeman : ‘‘எங்க பாட்டன்கள் செக்கிழுத்தார்கள், சிறையில் இருந்தார்கள். செந்தில்பாலாஜி செய்தது தியாகம் என்றால், என் பாட்டன்கள் செய்ததை என்னவென்று சொல்வது? இந்த நாட்டில் மண் அள்ளி விற்பது, மலை குடைந்து விற்பது, சாராயம் காய்ச்சுவது இதெல்லாம் தியாகமா?’’

Seeman : ‘கமிஷன் வாங்குவது.. லஞ்சம் பெறுவது.. மதுபானத்திற்கு ரூ.10 அதிகம் வாங்குவது தான் தியாகம்’ முதல்வரை சாடிய சீமான்!
Seeman : ‘கமிஷன் வாங்குவது.. லஞ்சம் பெறுவது.. மதுபானத்திற்கு ரூ.10 அதிகம் வாங்குவது தான் தியாகம்’ முதல்வரை சாடிய சீமான்!

இங்கே எதுக்கு தான் பரபரப்பு இல்ல?

‘‘நம்ம நாட்ல எதில் தான் பரபரப்பு இல்லை? லட்டு பரபரப்பு, ஜிலேபி பரபரப்பு, பஞ்சாமிர்தம் பரபரப்பு அப்புறம் ஜாமின் கிடைப்பது பரபரப்பு. பரபரப்புக்கு பஞ்சம் இருக்கா? ஜாமினில் வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தியாகத்தையும், வீரத்தையும் பாராட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மாக் சரக்கை கூடுதலாக விலை வைத்து விற்பது , பத்து ரூபாய் கூடுதலாக விற்பது, நேரம் கடந்து சரக்கு விற்பது, கள்ளச்சரக்கு ஓட்டுவது இது எல்லாம் தியாகத்தில் வருகிறது. 

எங்க பாட்டன்கள் செக்கிழுத்தார்கள், சிறையில் இருந்தார்கள். செந்தில்பாலாஜி செய்தது தியாகம் என்றால், என் பாட்டன்கள் செய்ததை என்னவென்று சொல்வது? இந்த நாட்டில் மண் அள்ளி விற்பது, மலை குடைந்து விற்பது, சாராயம் காய்ச்சுவது இதெல்லாம் தியாகத்திலும், வீரதீர செயல்களில் பெருமை மிக்க செயல்களில் வருகிறது. செந்தில்பாலாஜி மீது வழக்கு போட்டது யார்? திமுக தானே..  உள்ள வெச்சது யார்? நீங்கள் போட்ட வழக்கில் தானே, அவர் உள்ளே போயிட்டு வந்திருக்கிறார். 

அனுப்பியது யாரு? இப்போ வரவேற்பது யார்?

அனுப்பியதே திமுக தான், இப்போ வெளியே வந்ததும், ‘வருக.. வருக.. வருக.. உங்கள் வீர, தீர செயல்..’ என்பதா? உங்க கட்சியில் இருந்தால் வீர, தீர செயல், தியாகி! அடுத்த கட்சியில் இருந்தால், அது ஊழல் குற்றச்சாட்டு ஆகிவிடும். இதே முதல்வர் ஸ்டாலின், கரூரில் செந்தில்பாலாஜி பற்றி பேசியது பொதுவில் இருக்கு. ‘இவர் கெட்டகேட்டுக்கு.. இவரும் முதல்வர் பட்டியலில் இருந்தார்.. செந்தில் பாலாஜி செய்த ஊழல் தெரியுமா?..’ என்று ஸ்டாலின் பேசிய வீடியோவை அனுப்பட்டுமா? 

திரும்ப கட்சியில் அவர் வந்து சேர்ந்ததும், ‘உங்களை மாதிரி ஒருத்தருக்காக தான் காத்திருந்தோம்.. அங்கே செய்த திருட்டை இங்கே செய்யுங்க..’ என்றார்கள். ஏன்னா.. நல்ல திருடன்! ‘அவர் அமைச்சர் ஆவதில் எந்த தடையும் இல்லை’ என்கிறார்கள், அப்போ, அவரை அமைச்சர் ஆக்குவாங்க! யார் அதிகம் வசூலித்து, கப்பம் கட்டித் தருகிறானோ அவன் நல்ல அமைச்சர்! இதை போய் என்னிடம் கேட்டு, என் வாயை பிடுங்காதீர்கள்!

தமிழ்நாடு மற்றும் அரசியல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள், சமூக வலைதளங்கள் மூலமாகவும் எங்களை பின்தொடரலாம்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.