Kanimozhi: பாரதி கண்ட கனவை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றுகிறது - கனிமொழி பேச்சு
Sep 25, 2022, 08:04 PM IST
பாரதியாரின் கனவினை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளாா்.
கோவில்பட்டி: பாரதியார் கண்ட கனவை திராவிட மாடல் ஆட்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அரங்கில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் "மகாகவி பாரதியார் 60 ஆண்டு வைரவிழா" இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் நேற்று (செப்.24) நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, பாரதியார் கண்ட கனவு, இந்த நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு எல்லாம் நியாயம் கிடைக்க வேண்டும்; சமூக நீதி கிடைக்க வேண்டும்; ஆணும், பெண்ணும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும் என்பதே. இந்த கனவைத் தான் திராவிட மாடல் ஆட்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சியில் தமிழ் எழுத்தாளர்களுக்கும், இந்த மண்ணிற்காக பாடுபட்டவர்களுக்கும் அங்கீகாரமும் மரியாதையும் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி என்பது தமிழுக்கான, தமிழருக்கான ஆட்சி. நமது மண்ணின் அடையாளங்களை, தமிழ் மண்ணின் வாழ்க்கையை, இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லக்கூடியவர்களைக் கொண்டாடக்கூடிய ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது." என்று கூறினார்.
டாபிக்ஸ்