தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vaan Island: தூத்துக்குடி வான் தீவுக்கு படகில் சென்று கனிமொழி எம்பி ஆய்வு!

Vaan Island: தூத்துக்குடி வான் தீவுக்கு படகில் சென்று கனிமொழி எம்பி ஆய்வு!

Sep 25, 2022, 03:17 PM IST

தூத்துக்குடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள வான் தீவு பகுதிக்கு, கனிமொழி எம்.பி., படகில்‌ சென்று ஆய்வு மேற்கொண்டார்.

  • தூத்துக்குடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள வான் தீவு பகுதிக்கு, கனிமொழி எம்.பி., படகில்‌ சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மன்னார் வளைகுடா இந்தியாவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு இயற்கை பொக்கிஷமாகும். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மண்டபம் முதல் கன்னியாகுமரி வரை 21 தீவுகள் உள்ளன.
(1 / 8)

தூத்துக்குடி பகுதிகளில் 4, வேம்பாரில் 3, கீழக்கரையில் 7, மண்டபம் பகுதியில் 7 தீவுகள் அமைந்துள்ளன. குறிப்பாக தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள வான் தீவின் நிலப்பரப்பு மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.
(2 / 8)

கடந்த 2015ஆம் ஆண்டு இந்த தீவின் அளவு வெறும் 2.3 ஹெக்டேர் அளவு மட்டுமே இருந்தது. இந்த நிலையில் வான் தீவின் நிலப்பரப்பு குறைந்து வருவதைத் தடுக்கும் வகையில், அலைத்தடுப்புச் சுவர்கள், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
(3 / 8)

இந்த பணிகளையும், வனத்துறை மூலம் வான் தீவு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் கனிமொழி எம்.பி படகில் சென்று நேற்று (செப்.24) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
(4 / 8)

மேலும் அந்தப் பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வரும் பனைமரக் கன்றுகளையும், பாதுகாக்கப்பட்ட பவளப்பாறைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்.பி., இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
(5 / 8)

ஆய்வுக்குச் சென்ற கனிமொழி எம்.பி., தீவுப்பகுதியில் உள்ள கடலில் இறங்கி பவளப்பாறை, ஆக்டோபஸ், உள்ளிட்ட இன்னும் பல அரியவகை கடல் வாழ் உயிரினங்களை தனது கையில் ஏந்தி உற்சாகத்துடன் பார்த்து மகிழ்ந்தார்.
(6 / 8)

இது குறித்து பேசிய கனிமொழி எம்.பி., வான் தீவை பாதுகாக்கவும், தீவை சார்ந்துள்ள பல்வகையான உயிர்களை பாதுகாக்கவும் தமிழக அரசு முயற்சி எடுத்தது. தற்போது இந்த தீவின் அளவு அதிகரித்து சுமார் 3.75 ஹெக்டேராக உள்ளது. செயற்கை பவளப்பாறைகளைச் சுற்றிலும் மீன்வளம் வெகுவாக அதிகரித்து உள்ளது என்றாா்.
(7 / 8)

இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர், நபார்டு துணைப் பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை