தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ptr: திமுக தலைவர்கள் பற்றி ஜேபி நாட்டா விமர்சனம் - பிடிஆர் நக்கல் பதில்

PTR: திமுக தலைவர்கள் பற்றி ஜேபி நாட்டா விமர்சனம் - பிடிஆர் நக்கல் பதில்

Sep 24, 2022, 11:59 PM IST

google News
திமுகவில் படித்த தலைவர்கள் இல்லை என்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பேச்சுக்கு, தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நக்கலாக டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், " திமுகவினர் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கேள்விப்பட்டேன். நான் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

நீட் தேர்வு எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்க கூடிய தேர்வாக உள்ளது. இதை அவர்கள் எதிர்க்க காரணம் திமுகவில் படித்த தலைவர்கள் யாரும் இல்லை. இதனால் கல்வியை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் நீட் தேர்வை எதிர்கிறார்கள்.

நீங்கள் எதுவும் படிக்காமல் இருந்துவிட்டு, கல்வியை பற்றி பேசினால் இப்படித்தான் கருத்துக்களை தெரிவிப்பீர்கள். நீட் தேர்வு காரணமாக கிராமத்தில் உள்ள மக்கள் கல்வியை பெற முடிகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் மருத்துவ படிப்புகளை படிக்க முடிகிறது. பல பிரிவுகளில் இருந்தும் மக்கள் மருத்துவ படிப்புகளில் சேர முடிகிறது" என்று பேசினார்.

இதற்கு டுவிட்டரில் நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "2 நாடுகள் 3 பல்கலைகழகங்கள் 4 வெவ்வேறு படிப்புகள் சர்வதேச தரத்தில் பல தேர்வுகளை எழுதி, 4 பட்டங்கள் பெற்ற எனக்கு கல்வி தகுதி இல்லை' என ஜேபி நட்டா கூறியுள்ளார்.

ஒரு வேலை பிரதமர் நரேந்திர மோடி படித்த 'Entire Political Science' படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் படித்தவர் என சொல்லியிருப்பார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர்கள் படிப்பறிவு குறித்து ஜேபி நட்டாவின் விமர்சனத்துக்கு பதிலடி தரும் விதமாக திமுகவின் முக்கிய தலைவர்கள் என்னென்ன படித்துள்ளார்கள் என்பதையும் கட்சியனர் வரிசையாக பட்டியலிட்டு வருகின்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி