HT Flop Story: ’மாட்டிறைச்சியை விற்று மட்டையான ட்ரம்ப்!' Trump Steaks தோற்ற கதை!
Dec 28, 2023, 07:00 AM IST
”HT Flop Story: ட்ரம்ப் என்ற பெயர் ப்ரீமியம் மாட்டிறைச்சியை மக்களுக்கு அருகில் கொண்டு சென்றாலும் அவர்களின் நாவுக்கு சுவை ஊட்டுவதாக இல்லை, எரிச்சல் ஊட்டுவதாக இருந்தது”
தோல்வி அடைந்த பிராண்டுகள் குறித்தும் தொழில்முனைவோர்கள் குறித்தும், தோல்விக்கான காரணங்கள் குறித்தும் விளக்கும் வணிகத் தொடர் HT Flop Story
அமெரிக்க முன்னாள் அதிபரும், முன்னணி தொழில் முனைவோருமான டொனால்ட் ட்ரம்பின் பிரீமியம் மாட்டிறைச்சி தயாரிப்புகளை டிரம்ப் ஸ்டீக்ஸ் என்ற பெயரில் சந்தைப்படுத்திய நிலையில் அது சறுக்கிய சம்பவம் உற்றுநோக்கப்பட வேண்டியதாக உள்ளது.
தொடக்கம்
அமெரிக்க தொலைக்காட்சிகளில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ட்ரம்ப் பிரபலமாகி கொண்டிருந்த காலமான 2007ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி அன்று ஆரவாரத்துடன் டிரம்ப் ஸ்டீக்ஸ் என்ற பெயரிஉல் மாட்டிறைச்சி விற்பனையை தொடங்கினார்.ஆனால் அறிமுகம் ஆகி 60 நாட்களை கடப்பதற்குள் ஜூலை மாதம் 2007ஆம் ஆண்டிலேயே பிராண்ட் இழுத்து மூடப்பட்டது.
விநியோக சிக்கல்கள்
பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி விற்பனையை உணவுதுறைக்கு தொடர்பு இல்லாத ஷார்ப்பர் இமேஜ் மூலம் விற்பனை செய்ய முயன்றது இதன் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஷார்ப்பர் இமேஜ் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் கேஜெட்டுகளை இணையம் மூலம் விற்பதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்தது. ட்ரம்ப் ஸ்டீக்ஸ் அறிமுகம் ஆன காலத்தில் பரவலாக கடைகளில் கிடைப்பதற்கு பதிலாக ஷாஅர்ப்பர் இமேஜ் மூலம் கிடைக்க செய்தது பிரச்னையாக இருந்தது.
தரம்
ஸ்டீக்ஸ் அறிமுகம் ஆன காலத்தில் அதன் தரம் மற்றும் சுவை குறித்து கேள்வி எழுப்பினர். இது வாக்குறுதியளிக்கப்பட்ட பிரீமியம் அனுபவத்துடன் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததாக விமர்சகர்கள் கூறியது பிராண்டின் நம்பகத்தன்மையைக் குறைத்தது.
உலக பொருளாதார பாதிப்பு
ட்ரம்ப் ஸ்டீக்ஸ் அறிமுகம் ஆன காலத்தில்தான் அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருந்தது, அதன் தாக்கம் உலகம் முழுவதும் இருந்தது. பொருளாதார நிச்சயமற்ற காலத்தில், ஆடம்பர உணவுப் பொருட்கள் மீதான மக்களின் பார்வை வெகுவாக குறைந்தது இதன் பின்னடைவுக்கு மற்றுமோர் காரணம்.
டிரம்ப் ஸ்டீக்ஸின் தோல்வி, சந்தை ஆராய்ச்சி, வணிக வியூகம், நுகர்வோரின் திருப்தி உள்ளிட்டவற்றை தீவிர ஆய்வுக்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் TIME இதழ் டிரம்ப் வணிக தோல்விகளின் பட்டியலில் ’டிரம்ப் ஸ்டீக்ஸ்’ பிராண்ட் பெயரை சேர்த்தது. 2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் ட்ரம்பை கேலி செய்யும் வகையில் டிரம்ப் ஸ்டீக்ஸ் தோல்வி குறித்த விளம்பரத்தை எதிர்க்கட்சிகள் ஒளிபரப்பு செய்தன.
ட்ரம்ப் என்ற பெயர் ப்ரீமியம் மாட்டிறைச்சியை மக்களுக்கு அருகில் கொண்டு சென்றாலும் அவர்களின் நாவுக்கு சுவை ஊட்டுவதாக இல்லை, எரிச்சல் ஊட்டுவதாக இருந்தது.
டாபிக்ஸ்