தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Highcourt: சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக லஷ்மிநாராயணன் பதவியேற்பு

Highcourt: சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக லஷ்மிநாராயணன் பதவியேற்பு

Manigandan K T HT Tamil

Feb 27, 2023, 11:08 AM IST

Venkatachari Lakshminarayanan: அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
Venkatachari Lakshminarayanan: அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

Venkatachari Lakshminarayanan: அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கூடுதல் நீதிபதி லட்சுமிநாராயணன் இன்று பதவியேற்றார்.

ட்ரெண்டிங் செய்திகள்

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

Savukku Shankar Arrest: ‘சவுக்கு சங்கர் கைது! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!’ ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்புரை நிகழ்த்தினர்.

இவர் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக உயர்கிறது.

முன்னதாக, வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லஷ்மிநாராயணனை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

நீதிபதி லஷ்மிநாராயணன் பயணம்

கடந்த 17ஆம் தேதி உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு கூடி ஆலோசித்து முடிவு செய்து மத்திய அரசிடம் பரிந்துரையை ஏற்று இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பதவியேற்ற நாள் முதல் 2 ஆண்டுகளுக்கு அவர் கூடுதல் நீதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

1970 ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி பிறந்த லஷ்மிநாராயணன், பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூலில் சட்டப்படிப்பை படித்தார். 1995ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி வழக்கறிஞராக பதவியேற்றார்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் standing counsel -ஆக இவர் 2008 முதல் இருந்தார். அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் Indian Drugs and Pharmaceuticals Limited இன் வழக்கறிஞராகவும் இருந்தார்.

டாபிக்ஸ்