Biriyani Man Arrested: ’அது ஆபாச வீடியோ!’ யூடியூபர் பிரியாணி மேனை கைது செய்தது ஏன்? சென்னை மாநகர காவல்துறை விளக்கம்!
Jul 30, 2024, 04:34 PM IST
Biriyani Man Arrested: செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு சைகைளைக்காட்டி, கொச்சை வார்தைகளுடன் youtube வீடியோ பதிவேற்றம் செய்ததாக புகார
Biriyani Man Arrested: செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகளை வீடியோவாக வெளியிட்டதாலேயே பிரியாணி மேனை கைது செய்து உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது.
சமீப காலமாக யூ-டியூப்பில் ட்ரெண்டாக மாறி இருக்கும் சேனல் தான், பிரியாணி மேன். இதை நடத்தி வருபவர், அபிஷேக். இவருக்கும் இர்ஃபானுக்கும் சமீப காலமாக பெரிய பஞ்சாயத்து நடந்து வருகிறது.
இர்ஃபான் தான் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தினார், அவரை அரசியல் கட்சியினர் காப்பாற்றிவிட்டதாக பொதுவெளியில் கூறினார். அதேபோல் இர்ஃபான் சென்று ரிவ்யூ செய்யும் உணவகங்களில் தரமான உணவு வழங்கவில்லை; அவர் விளம்பரத்திற்காக பணம்பெற்றுக்கொண்டு ரிவ்யூ செய்கிறார் என அடுக்கடுக்காக அவரை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார், பிரியாணி மேன் அபிஷேக். இதைப் பார்த்து கடுப்பான இர்ஃபான் அவருக்கு பதிலடியும் கொடுத்தார்.
டெய்லர் அக்காவுடனும் வம்பிழுத்த பிரியாணி மேன்
இர்ஃபானுடன் மட்டும் இல்லாமல், யூடியூப் பிரபலமான டெய்லர் அக்கா ஆபாசமான காட்சியமைப்பு மூலம் வீடியோ சூட் செய்து வெளியிடுகிறார் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனால் அவரின் ரசிகர்கள், கடுமையாக பிரியாணி மேனை சாடியதாக சொல்லப்படுகிறது.
தற்கொலை முயற்சி எடுத்த பிரியாணிமேன்
இந்நிலையில் இந்த பிரச்னை ஒரு புறம் சென்று கொண்டு இருக்க நேற்று, பிரியாணி மேன் தனது யூடியூப் சேனலின் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்றார். இதற்கு ஜேசன் என்பவர் தான் காரணம் என்று கூறி விட்டு, தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது, லைவ் பார்த்த நண்பர் பிரியாணி மேனின் தாய்க்கு போன் செய்தார்.
உடனே அவர் சென்று தன் மகனை காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்கொலை செய்து கொள்வதே தவறே, அதை அவர் லைவ் வீடியோவில் முயன்றது மிகப்பெரிய தவறு. அதனால் சட்டப்படி பிரியாணி மேன் அபிஷேக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
கைதுசெய்யப்பட்ட பிரியாணி மேன்
இந்நிலையில் பெண் ஒருவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், ‘பிரியாணி மேன்’ என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக்கை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மாநகர காவல்துறை விளக்கம்
நேற்று (29.07.2024), சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் (South Zone Cyber Crime PS), தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கொடுத்த புகாரில், தான் தினந்தோறும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகளை வீடியோ பதிவு செய்து அந்த காணொளியை youtube-ல் பதிவேற்றம் செய்துள்ள பிரியாணி மேன் என்ற youtube channel நடத்தி வரும் அபிசேஷக் ரபி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி குறிப்பிட்டிருந்தார். மேற்படி புகாரின் அடிப்படையில், தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலையத்தில் BNS ACT, IT Act, Indecent representation of Women (Prohibition) Act and தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு. செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு சைகைளைக்காட்டி, கொச்சை வார்தைகளுடன் youtube வீடியோ பதிவேற்றம் செய்த எதிரி அபிஷேக் ரபி. வ/29 என்பவரை நேற்று (29.07 2024) செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் எதிரி அபிஷேக் ரபி நேற்று (29.07.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார் என காவல்துறை தெரிவித்து உள்ளது.