தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Today Gold Rate : அய்யோ தங்கமே தாங்காது; ஒரே நாளில் இவ்வளவு விலை உயர்வா!

Today Gold Rate : அய்யோ தங்கமே தாங்காது; ஒரே நாளில் இவ்வளவு விலை உயர்வா!

May 20, 2023, 09:55 AM IST

Chennai Gold Rate: சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 440 உயர்ந்துள்ளது.
Chennai Gold Rate: சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 440 உயர்ந்துள்ளது.

Chennai Gold Rate: சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 440 உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் 440 உயர்ந்துள்ளது.

உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘மக்களே உஷார்! மீண்டும் வீசப்போகும் வெப்ப அலை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

இன்றைய தங்கம் விலை

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.20) கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் 5,680 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,440 ஆகவும் விற்பனையாகிறது.

நேற்றைய தங்கம் விலை

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே.19) கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் 5,625 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.45,000 ஆகவும் விற்பனையானது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 1000 உயர்ந்து ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது.

இன்றைய தங்கம் விலைதங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது.

22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்