தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps: குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் எங்கே? அரசை குடையும் ஈபிஎஸ்!

EPS: குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் எங்கே? அரசை குடையும் ஈபிஎஸ்!

Kathiravan V HT Tamil

May 30, 2023, 06:54 PM IST

சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

தருமபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, திறந்த வெளி குடோனில் 7ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாக கிடைத்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Captain Vijayakanth: ’நாளை விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!’ கேப்டன் கோயில் வரை பிரேமலதா செய்யப்போகும் சம்பவம்!

Weather Update: ‘8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!’

EPS, DMK Government: திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை..இன்னும் இந்த ஆட்சி தொடர்ந்தால்- விளாசும் இபிஎஸ்!

Weather Update: சென்னையில் சட்டென மாறிய வானிலை..14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்!

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னகாரம், பாலக்கோடு, நல்லம்ப்பள்ளி, மாரண்டஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் ஏகக்ரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்த்ஜில் விளையும் நெல், தருமபுரி மாவட்ட மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் மாதந்தோறும் டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அவைகளை தருமபுரிக்கு சரக்கு நெயில் மூலம் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு வரும் நெல் மூட்டைகள், தமிழ்நாடு நுழர்பொடுள் வாணிப கழகத்திற்கு சொந்தமான தருமபுரி மாவட்ட ஆட்சியர் பங்களா பின்புறத்தில் உள்ள திறந்த வெளி குடோனில் அடுக்கி வைத்து சேமிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தருமபுரிக்கு சரக்கு ரயில் மூலம் 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதனை நுகர்பொருள் வாணிப கழக குடோனில் வைக்கப்பட்டிருந்தது.

அதில் இருந்து சுமார் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதையெடுத்து சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் விஜிலென்ஸ் போலீசார் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த விடியா திமுக ஆட்சியில், தற்போது

தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ளதாக செய்திதாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

மக்கள் வரிப்பணத்தில் உல்லாசப் பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதல்வர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாயமான 7000 டன் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்