தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'அவனே பேசுவான், அவனே கத்துவான், அவனே சிரிப்பான்' சீமானை கலாய்த்த அமைச்சர்!

'அவனே பேசுவான், அவனே கத்துவான், அவனே சிரிப்பான்' சீமானை கலாய்த்த அமைச்சர்!

Kathiravan V HT Tamil

Mar 17, 2023, 09:45 AM IST

”நாம் நடுவதை வடநாட்டுக்காரர்கள் நன்றாக நடவு நடுகிறார்கள். என் ஊட்ல மாடுகளை பார்த்துக் கொள்வதே வடநாட்டுக்காரர்கள்தான்”
”நாம் நடுவதை வடநாட்டுக்காரர்கள் நன்றாக நடவு நடுகிறார்கள். என் ஊட்ல மாடுகளை பார்த்துக் கொள்வதே வடநாட்டுக்காரர்கள்தான்”

”நாம் நடுவதை வடநாட்டுக்காரர்கள் நன்றாக நடவு நடுகிறார்கள். என் ஊட்ல மாடுகளை பார்த்துக் கொள்வதே வடநாட்டுக்காரர்கள்தான்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தாமோ.அன்பரசன் பேசுகையில், பிஜேபிகாரணுங்க எதுக்கும் துணிஞ்சவனுங்க. கலவரத்த உண்டு பண்ணி கட்சி நடத்தும்னு நனைக்கிறாங்க. நடவு நடுவதற்கு கூட நம்மாட்கள் இல்லை, வடநாட்டுக்காரர்கள்தான்.

ட்ரெண்டிங் செய்திகள்

Captain Vijayakanth: ’நாளை விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!’ கேப்டன் கோயில் வரை பிரேமலதா செய்யப்போகும் சம்பவம்!

Weather Update: ‘8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!’

EPS, DMK Government: திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை..இன்னும் இந்த ஆட்சி தொடர்ந்தால்- விளாசும் இபிஎஸ்!

Weather Update: சென்னையில் சட்டென மாறிய வானிலை..14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்!

நாம் நடுவதை வடநாட்டுக்காரர்கள் நன்றாக நடவு நடுகிறார்கள். என் ஊட்ல மாடுகளை பார்த்துக் கொள்வதே வடநாட்டுக்காரர்கள்தான்.

இன்று சீமான் போன்ற மெண்டல்கள் எல்லாம் நாட்டில் வந்துள்ளது. அவனே பேசுவான், அவனே கத்துவான், அவனே சிரிப்பான். சவுக்கு சங்கருன்னு ஒருத்தன் இருக்கான். இவர்களை எல்லாம் உள்ளே தூக்கிப்போட்ட வேண்டும். திமுக குறித்து பொய்யான அவதூறுகளை பரப்புகிறார்கள்.

கடந்த 2019 தேர்தலில் பெற்ற வெற்றியை விட 2024தேர்தலில் பெற்ற பெருவெற்றியை பெற வேண்டும்.

தொடர்ந்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, யார் பிரதமராக வர வேண்டும் என்பதைவிட யார் பிரதமராக வரக்கூடாது என்பதுதான் முக்கியம் என மு.க.ஸ்டாலின் சொல்லி உள்ளார். கடந்த 2019 தேர்தலில் இந்தியா முழுவதும் 37 சதவீத வாக்குகளை மட்டுமே மோடி பெற்றுள்ளார். மீதமுள்ள 63 சதவீத வாக்குகளை மற்றக்கட்சிகள் பெற்றது.

இந்த 63 சதவீதம் ஒன்றாக சேர்ந்தால் 37 சதவீதத்தை நாம் அடித்துவிடலாம் என்று தளபதி சொன்னார். இந்த பேச்சைக்கேட்ட அடுத்தநாள்தான் டெல்லியில் இருப்பவர்களுக்கு ‘ஆஹா இன்னொரு கருணாநிதி கிளம்பிவிட்டார்; ஆட்சி மாற்றம் வந்துவிடும்’ என்றார்கள் என ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

டாபிக்ஸ்