தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Fact Check : சீமானின் வீடியோவை காரில் செல்லும் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்தாரா? வைரலாகும் வீடியோ.. உண்மை இதுதான்!

Fact Check : சீமானின் வீடியோவை காரில் செல்லும் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்தாரா? வைரலாகும் வீடியோ.. உண்மை இதுதான்!

Fact Crescendo HT Tamil

Jul 18, 2024, 10:43 AM IST

google News
Fact Check : காரில் செல்லும் போது சீமானின் பேட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
Fact Check : காரில் செல்லும் போது சீமானின் பேட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

Fact Check : காரில் செல்லும் போது சீமானின் பேட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

காரில் செல்லும் போது சீமானின் பேட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வு செய்தது.

தகவலின் விவரம்

மு.க.ஸ்டாலின் காரில் சென்ற போது சீமானின் பேச்சைக் கேட்டாரா?

உண்மைப் பதிவைக் காண

மு.க.ஸ்டாலின் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து சீமானின் பேட்டியை பார்ப்பது போன்று வீடியோ உருவாக்கப்பட்டு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஓட்டுநர் ஒருவரே இதன் உண்மைத் தன்மையை அறிவார்..! ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு முப்பொழுதும் அண்ணன் மீது தான் சிந்தனை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையும் கூட பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் சீமான் பேட்டி மட்டும்தான் வீடியோவாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் அமர்ந்திருக்கும் காட்சி எல்லாம் புகைப்படமாகவே எந்த ஒரு அசைவும் இன்றி இருக்கிறது. இது மட்டுமல்ல மு.க.ஸ்டாலின் புத்தகம் படிப்பது போலவும் இந்த புகைப்படத்தை எடிட் செய்து சிலர் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்த உண்மையான புகைப்படம் நமக்குக் கிடைத்தது. அதில் டேப்லெட் போன்ற சிறிய வகை கணினியைப் பயன்படுத்தியது தெரியவந்தது.

தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியானது

அந்த பதிவில், “#TNBreakfastScheme விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை #CMDashBoard வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியானது

எவ்வளவு குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப்பட்டது, எவ்வளவு குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவும் செயலியை அவர் பார்த்திருப்பதைச் சீமான் வீடியோவை பார்த்தது போன்று, புத்தகம் படித்தது போன்று எடிட் செய்து தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது, எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கம் திட்டத்தில் எவ்வளவு குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது என்று மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த புகைப்படத்தை, சீமான் பேட்டியை பார்த்த ஸ்டாலின் என்று எடிட் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது.

எனவே, வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் ஃபேக்ட் கிரஸண்டோ-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை