தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Deputy Tahsildar Arrested In Madurai

Madurai : போலி பட்டா வழங்கிய விவகாரம்.. மதுரையில் துணை தாசில்தார் கைது!

Divya Sekar HT Tamil

Mar 26, 2023, 11:21 AM IST

மதுரையில் போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் நில அபகரிப்பு பிரிவு போலீசார் துணை தாசில்தாரை கைது செய்தனர்.
மதுரையில் போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் நில அபகரிப்பு பிரிவு போலீசார் துணை தாசில்தாரை கைது செய்தனர்.

மதுரையில் போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் நில அபகரிப்பு பிரிவு போலீசார் துணை தாசில்தாரை கைது செய்தனர்.

மதுரை : கலைநகரில் உள்ள பல்லவி நகரை சேர்ந்தவர் கோபிலால். இவர் கடந்த 1990-ம் ஆண்டு ஆனையூர் பகுதியில் சையது அபுதாஹிர் என்பவருக்கு சொந்தமான காலியிடத்தை வாங்கி வீடுகட்டினார். ஆனால் அந்த இடம் ஏற்கனவே பேட்டைக்காரன் என்ற ராமன் பெயரில் பட்டாபெற்று வேறு நபருக்கு விற்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

'அஜித்துக்கும் எனக்கும் ஒரே Wavelength'..கலைஞர் இருக்கும் போதே தைரியம்..பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்த ஜெயக்குமார்!

Weather Update: மக்களே உஷார்.. இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்…வானிலை மையம் எச்சரிக்கை!

Today Gold Rate : மாதத்தின் முதல் நாளே குட் நியூஸ்.. தங்கம் சவரனுக்கு 920 குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

LPG Price : குட் நியூஸ் மக்களே.. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு.. வெளியான புதிய விலைப்பட்டியல்!

இந்த நிலையில் கோபிலாலுக்கு சொந்தமான அந்த இடத்தை கோசாகுளத்தைச் சேர்ந்த ராமன் மகன் ராஜா செல்வராஜ் என்பவர் தனது பெயருக்கு பட்டா மாற்றிக் கொண் டது தெரியவந்தது. இது குறித்து மதுரை நகர் நில அபகரிப்பு பிரிவில் 2021-ம் ஆண்டு கோபிலால் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கோபிலால் குறிப்பிட்ட இடத்தை வாங்குவதற்கு முன் ராமன் என்பவரது பெயரில் பட்டா இருந்துள்ளது. மேலும் ராஜா செல்வராஜ் தனது தந்தையின் பெயர் ராமன் என்ற பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மேற்படி இடத்துக்கு அவரது பெயரில் பட்டா பெற்றது தெரியவந்தது. 

மேலும் அதற்கான பட்டாமாறு தலைகிராம நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வன், கிராம உதவியாளர் பால் பாண்டி ஆகியோர் ஆய்வு செய்து அப்போதைய துணை தாசில்தாராக மீனாட்சி சுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் பட்டா வழங்கியது தெரியவந்தது.

அதன் பின்னர் ராஜா செல்வராஜ், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் முறைகேடு வழக்கு பதிவு செய்தனர். தற்போது மேற்கு தாலுகாவில் துணை தாசில்தாராக இருந்த மீனாட்சி சுந்தரம் இந்த வழக்கில் ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றார். அதை எதிர்த்து எதிர்தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் அவரது முன்ஜா மீன் ரத்தானது. அதை தொடர்ந்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடச்சனேந்தல் பகுதியில் அவர் இருப்பதை அறிந்த நிலஅபகரிப்பு பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று மீனாட்சி சுந்தரத்தை கைது செய்தனர்.

டாபிக்ஸ்