தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Court Judgement : தூத்துக்குடி இந்து மக்கள் கட்சி மாநாட்டுக்கு அனுமதி

Court Judgement : தூத்துக்குடி இந்து மக்கள் கட்சி மாநாட்டுக்கு அனுமதி

Priyadarshini R HT Tamil

Mar 27, 2023, 06:09 PM IST

HighCourt Bench : இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி, கருத்தரங்கம், மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை ரத்து செய்ய கோரிய வழக்கு குறித்த விவரம்
HighCourt Bench : இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி, கருத்தரங்கம், மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை ரத்து செய்ய கோரிய வழக்கு குறித்த விவரம்

HighCourt Bench : இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி, கருத்தரங்கம், மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை ரத்து செய்ய கோரிய வழக்கு குறித்த விவரம்

தனியார் மஹாலில் உள்அரங்கில் கருத்தரங்கம், மாநாடு நடத்துவதற்கு மனுதாரர் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் கூட்டம் நடைபெறும் என பிரமாண பத்திரத்தை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தாக்கல் செய்யவும், அதனை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் பரிசீலனை செய்து அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. ஆனால், பேரணி நடத்த அனுமதி மறுத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Captain Vijayakanth: ’நாளை விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!’ கேப்டன் கோயில் வரை பிரேமலதா செய்யப்போகும் சம்பவம்!

Weather Update: ‘8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!’

EPS, DMK Government: திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை..இன்னும் இந்த ஆட்சி தொடர்ந்தால்- விளாசும் இபிஎஸ்!

Weather Update: சென்னையில் சட்டென மாறிய வானிலை..14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்!

தூத்துக்குடியை சேர்ந்த வசந்தகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய இரு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பேரணி, கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஆதீனங்கள், சன்னியாசிகள் மற்றும் ஆன்மீக சான்றோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கருத்தரங்கம், மாநாடு தனியார் மஹாலில் நடைபெற உள்ளது.

எனவே, இந்த பேரணி, கருத்தரங்கம் மற்றும் மாநாட்டிற்கு அனுமதி வழங்க கோரி தூத்துக்குடி எஸ்பி மற்றும் தூத்துக்குடி காவல் ஆய்வாளரிடம் மனு கொடுத்து அதன் மீது எந்த பதிலும் அளிக்கவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தோம்.

தமிழ்நாடு அரசு தரப்பில், இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜீன் சம்பத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று பேசி வருகிறார். கலெக்டரை சந்தித்து மனுவும் அளித்துள்ளார். இதனால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் இவர்கள் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்து பேரணி, கருத்தரங்கம் மற்றும் மாநாடு நடத்த அனுமதி கோரிய மனுவை நிராகரிப்பு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.இந்த வழக்கில் காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடரலாம் என விலக்கு அளிக்கப்பட்டது.

எனவே, தூத்துக்குடியில் 2 நாட்கள் பேரணி, கருத்தரங்கம் மற்றும் மாநாடு ஆகியவற்றை நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை ரத்து செய்து பேரணி மற்றும் கருத்தரங்கம், மாநாடு நடந்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, பேரணி நடத்த அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து, தனியார் மஹாலில் உள் அரங்கில் கருத்தரங்கம் மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. எனவே, மனுதாரர் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் கூட்டம் நடைபெறும் என பிரமாணப் பத்திரத்தை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தாக்கல் செய்யவும், அதனை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் பரிசீலனை செய்து அனுமதி வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

டாபிக்ஸ்