தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bsp Chief Armstrong: கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கொலைகள் குறைவு! சென்னை மாநகர காவல் ஆணையர் பேட்டி!

BSP Chief Armstrong: கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கொலைகள் குறைவு! சென்னை மாநகர காவல் ஆணையர் பேட்டி!

Kathiravan V HT Tamil

Jul 06, 2024, 04:20 PM IST

google News
BSP Chief Armstrong's Murder: கேள்வி:- ஆருத்ரா பண மோசடி வழக்கிற்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு சில தகவல்கள் உள்ளது. அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். அது குறித்து முழுமையாக சொல்ல முடியாது என மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி
BSP Chief Armstrong's Murder: கேள்வி:- ஆருத்ரா பண மோசடி வழக்கிற்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு சில தகவல்கள் உள்ளது. அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். அது குறித்து முழுமையாக சொல்ல முடியாது என மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

BSP Chief Armstrong's Murder: கேள்வி:- ஆருத்ரா பண மோசடி வழக்கிற்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு சில தகவல்கள் உள்ளது. அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். அது குறித்து முழுமையாக சொல்ல முடியாது என மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கொலைகள் குறைந்து உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறி உள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார். 

கேள்வி:- கொலையில் தொடர்பு உடையவர்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றதே? 

தற்போது பிடித்த குற்றவாளிகள் வேலூர், திருவள்ளூர், பெரம்பூர் பகுதிகளை சேர்ந்தவர்கள்தான். பிடிபட்டவர்களில் யாரும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கிடையாது. 

கேள்வி:- ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கல் இருக்கும் என்று காவல்துறை யூகிக்கவில்லையா?

சென்னை மாநகரில் ஏ,பி.சி பிரிவுகளில் 4 ஆயிரம் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளனர். அதில் 750 பேர் சிறையில் உள்ளனர். குண்டர் சட்டத்தில் 2021ஆம் ஆண்டில் 409 பேரும், 2022இல் 406 பேரும், 2023ஆம் ஆண்டில் 714 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர், இந்த ஆண்டில் கடந்த 6 மாதங்களில் 769 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உள்ளோம். 

ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் இருந்தது. அதில் அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டு உள்ளது. 

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைபடி, இந்தியாவிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரங்களில் சென்னை இடம்பெற்று உள்ளது. மேலும், லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனமும், இதை சொல்லி உள்ளது. 

கேள்வி:- ஆருத்ரா பண மோசடி வழக்கிற்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளதா?

சில தகவல்கள் உள்ளது. அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். அது குறித்து முழுமையாக சொல்ல முடியாது. 

2023ஆம் ஆண்டில் முதல் 6 மாதத்தில் 63 கொலை நடந்து இருந்தது. ஆனால் இதுவரை 58 கொலைகள் மட்டுமே நடைபெற்று உள்ளது. 

கேள்வி:- சரண் அடைந்தவர்கள்  உண்மை குற்றவாளிகள் இல்லை என திருமாவளவன் கூறி உள்ளாரே? 

மூன்று மணி நேரத்தில் கிடைத்த தகவல்களை வைத்து குற்றவாளிகளை கைது செய்து உள்ளோம். அவர்கள் கூறுவது குறித்து நிச்சயம் விசாரிப்போம். இது அனைத்தும் விசாரணையின் ஒரு பகுதி. கொலை தொடர்பான அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றோம் என கூறினார். 

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிக் கொன்றது. கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக வெட்டி உள்ளனர். பின்னர் தங்களது ஆயுதங்கள் முழுவதையும், ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டின் முன் போட்டுவிட்டு தப்பியோடினர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:-

Twitter: https://twitter.com/httamilnews 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v  

டாபிக்ஸ்

அடுத்த செய்தி