தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சென்னை மக்கள் கவனத்திற்கு.. மழை பாதிப்பு புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்த சென்னை மாநகராட்சி!

சென்னை மக்கள் கவனத்திற்கு.. மழை பாதிப்பு புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்த சென்னை மாநகராட்சி!

Divya Sekar HT Tamil

Oct 15, 2024, 06:42 AM IST

google News
Weather Update : சென்னை மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1913, 044-2561 9207, 044-2561 9204, 044-2561 9206-ஐ தொடர்புக் கொண்டு மழை பாதிப்பு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Weather Update : சென்னை மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1913, 044-2561 9207, 044-2561 9204, 044-2561 9206-ஐ தொடர்புக் கொண்டு மழை பாதிப்பு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Weather Update : சென்னை மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1913, 044-2561 9207, 044-2561 9204, 044-2561 9206-ஐ தொடர்புக் கொண்டு மழை பாதிப்பு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். இவை தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது. 

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகக்கூடிய நிலையில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 16, 17 ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

மிக கனமழை எச்சரிக்கை

இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் திருவள்ளூர், இராணிப்பேட்டை சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை 6 மாவட்டங்களில் கனமழை

நாளை மறுநாளான அக்டோபர் 17ஆம் தேதி அன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை காஞ்சிபுரம், இருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மாநகராட்சியின் 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிலும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044 2561 9204, 044 25619206 மற்றும் 044 2561 9207 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், மாநகராட்சியின் chennaicorporation.gov.in என்ற இணையதளம், நம்ம சென்னை செயலி, Greater Chennai Corporation Facebook. @chennaicorp என்ற Instagram-லும்,@chennaicorp என்ற Thread-லும், @chennaicorp என்ற X App ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

பாம்பு பிடிக்க உதவி எண்கள்

அதேபோல மழையின்போது வீட்டிற்குள் வரும் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளை பிடிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்புகளை பிடிக்க 044 22200335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கிண்டி வனத்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் 4 நாட்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியவும் அரசு அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை