தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Today Gold Rate: ‘ஒரே நாளில் எகிறி அடித்த தங்கம் விலை!’ சவரனுக்கு 600 ரூபாய் உயர்வு!’ வெள்ளி விலையும் உயர்ந்தது!

Today Gold Rate: ‘ஒரே நாளில் எகிறி அடித்த தங்கம் விலை!’ சவரனுக்கு 600 ரூபாய் உயர்வு!’ வெள்ளி விலையும் உயர்ந்தது!

Kathiravan V HT Tamil

Aug 09, 2024, 09:55 AM IST

google News
Today Gold Rate: தங்கம் விலை சற்று உயர்ந்து உள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Today Gold Rate: தங்கம் விலை சற்று உயர்ந்து உள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

Today Gold Rate: தங்கம் விலை சற்று உயர்ந்து உள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்

கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய மாற்றத்தை அடைந்து வந்தது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மத்திய பட்ஜெட் தாக்கலில் தங்கத்தின் மீது வரி குறைக்கப்பட்ட நிலையில், தங்கம் விலையானது கணிசமான அளவில் குறைந்தது. அதன் தொடர்ச்சியாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

அதன்படி, தங்கம் விலை சற்று உயர்ந்து உள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 9) சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.51,400-க்கும் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,425-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் கிராமுக்கு 1.50 காசுகள் உயர்ந்து ரூ. 88-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 88,000-க்கும் விற்கப்படுகிறது.

நேற்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஆகஸ்ட் 8) ஒரு சவரனுக்கு ரூ.50,880-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,350க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 86.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.86,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீது இருந்த 15 சதவீதம் இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் விளைவாக தங்கத்தின் விலை கணிசமாக குறைந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

மத்திய தங்க பத்திர முதலீடு திட்டம்:

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மத்திய தங்க பத்திர முதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. இன்றைய தங்கம் விலை தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை