தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Today Weather Update : தமிழ்நாட்டில் நாளை முதல் 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

Today Weather Update : தமிழ்நாட்டில் நாளை முதல் 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

Divya Sekar HT Tamil

Jan 02, 2023, 11:27 AM IST

நாளை முதல் 5ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் 5ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் 5ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(ஜன.02) வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ட்ரெண்டிங் செய்திகள்

Weather : தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை கொட்ட போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை!

Savukku Shankar Arrest : பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது - கோவை அழைத்து வந்த வழியில் விபத்து.. பின்னணி இதுதான்!

Weather Update: ‘மக்களே உஷார்! மீண்டும் வீசப்போகும் வெப்ப அலை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் ஜன.3 முதல் ஜன.5 வரையிலான தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரம் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரியளவில் எங்கும் மழை பெய்யவில்லை. அதேபோல வரும் நாட்களில் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் எதுவும் இல்லை.

வடகிழக்கு பருவமழை ஒரு சதவீதம் அதிகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் பெய்யும் வழக்கமான 440.30 மி.மீட்டர் மழையை காட்டிலும் இம்முறை ஒரு சதவீதம் அதிகமான மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வானிலை ஆய்வு மைய நடைமுறைப்படி அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை காலமாக கணக்கிடப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த காலக்கட்டத்தில் வழக்கமாக 440.30 மி.மீட்டர் மழை பதிவாவது வழக்கம்.

இந்த முறை வழக்கத்தைவிட ஒரு சதவீதம் அதிகம் மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 21 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளது.

வானிலை முன் அறிவிப்பை பொறுத்தவரை திங்கட்கிழமை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்"என தெரிவித்துள்ளது.

டாபிக்ஸ்