தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mhc: சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் நியமனம்! அவரது பின்னணி என்ன?

MHC: சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் நியமனம்! அவரது பின்னணி என்ன?

Jul 12, 2024, 05:14 PM IST

google News
சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியாக மும்பையை சேர்ந்த கே.ஆர்.ஸ்ரீராமை நியமித்து கெலிஜியம் பரிந்துரைத்துள்ளது. கே.ஆர்.ஸ்ரீராம் தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியாக மும்பையை சேர்ந்த கே.ஆர்.ஸ்ரீராமை நியமித்து கெலிஜியம் பரிந்துரைத்துள்ளது. கே.ஆர்.ஸ்ரீராம் தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியாக மும்பையை சேர்ந்த கே.ஆர்.ஸ்ரீராமை நியமித்து கெலிஜியம் பரிந்துரைத்துள்ளது. கே.ஆர்.ஸ்ரீராம் தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்காலிக இருந்த வந்துள்ளார் நீதிபதி ஆர்.மகாதேவன். அவரை தற்போது உச்சநீதிமன்றம் நீதிபதியாக கொலீஜியத்தால் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையில் நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தின் முடிவு கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கோடீஸ்வர் சிங் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவராக உள்ளார். இதன்மூலம் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த முதல் உச்ச நீதிமன்றம் நீதிபதி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

அத்துடன் நீதிபதி எம்.எஸ். ராமச்சந்திர ராவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்துக்கும். நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மத்திய பிரதேசம் உயர் நீதிமன்றத்துக்கும் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த கே.ஆர். ஸ்ரீராம்

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் நிதிக் கணக்கியல் மற்றும் மேலாண்மை மற்றும் எல்எல்பி ஆகியவற்றில் பி.காம் முடித்தார்.

பின்னர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் எல்எல்எம் (கடற்படை) தொடர்ந்தார். கடந்த 1986இல் மகாராஷ்டிரா மற்றும் கோவாவின் பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, மூத்த வழக்கறிஞர் எஸ் வெங்கிடேஸ்வரனின் சேம்பர்ஸில் கே.ஆர். ஸ்ரீராம் சேர்ந்தார்.

1997 முதல் சொந்தமாக தாமே வழக்குகளை கையாள தொடங்கினார். குறிப்பாக கப்பல் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டத்தில் நிபுணத்துவத்துடன் வணிக விஷயங்களை கையாண்டார். துறைமுகச் சட்டங்கள், சுங்கச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம், கடல் காப்பீடு (மறு காப்பீடு மற்றும் P&I உட்பட) ஆகியவற்றிலிருந்து எழும் ரிட் விஷயங்கள்; கம்பெனி சட்ட விவகாரங்கள் போன்றவற்றை கையாண்டார்.

கடந்த 2013 மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 2016 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக உறுதி செய்யப்பட்டார். மும்பை உயர்நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளுக்குப் நீதிபதியாக இருந்த அவர், தற்போது தலைமை நீதிபதி அந்தஸ்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தலைமை நீதிபதி ஓய்வு

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்து வந்த நீதிபதி சஞ்சய் வி கங்காபூர்வாலா கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த மே 24இல் இருந்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் தற்காலிகமாக பதவி வகித்து வந்தார். இதையடுத்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த கே.ஆர். ஸ்ரீராம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி